பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரிய புராண விளக்கம்-4

கோத்து அமைத்து. இடை-அந்தக் கோவைக்கு நடுவில், ஏன-காட்டுப்பன்றியினுடைய. க்: சந்தி. கோடு-கொம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். துண்ட-துண்டுகளான ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி. பிறை-சந்திரர்களை ஒருமை பன்மை மயக்கம். போல்வன-போல உள்ளவை. தாங்கிட தொங்க. வேங்கை-வேங்கைப் புலியினுடைய. வன். வன் மையான. தோல்-தோல் இடுப்பிலும். தண்டை-கால்களில் தண்டைகளைப் பூண்டு; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செயல்-பூத்தொழில். பொங்கிய-அழகு பொங்க அமைந்த, சன்னவீரம் - முத்துக்களால் ஒரு சிறந்த மாலையைக் கட்டி அரசர் முதலியவர்கள் அணிந்து கொள்ளும் ஒருவகை அணிகலன். அந்த அணிகலனை வேடர்கள் திண்ணனாருக்கு வேங்கைத் தோலால் செய்து அணிந்தார்கள். தயங்க-விளங்க.

பிறகு வரும் 60-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

திண்ணனாருடைய மார்பில் சிறிய யானைத் தந்தங் களினாற் செய்து அமைத்த திரட்சியைப் பெற்ற மணிகளைக் கட்டிய மாலை தொங்க, மாலையினால் தோற்றம் பொலிவை அடைந்த வாகுவலயங்கள் தழைப்பைப் பெற்று மின்னல்களைப் போல ஒளியை வீச ஒளியோடு சேர்ந்து விளங்கும் கங்கணங்கள் மேலே விளங்கிய முன்னங்கைகளில் கருமையான வில்லில் இறுகக் கட்டிய நாணைச் சுண்டும் கைகளில் செறிந்த அம்புகளை எய்வதற்குச் சாதனமாகிய கைக்கோதைகளைக் கட்டிவிட்டு. பாடல் வருமாறு :

மார்பிற்சிறு தங்த மணித்திரள் மாலை தாழத் தாளிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச் சேர்விற்பொலி கங்கணம் மீது திகழ்ந்த முன்கைக் கார்விற்செறி காணெறி கைச்செறி கட்டி கட்டி .' இந்தப் பாடலும் குளகம். மார்பில்-திண்ணனாருடைய மார்பில். சிறு-சிறிய தந்த-யானைத் தந்தங்களினாற் செய்து அமைத்த , ஒருமை பன்மை மயக்கம். மணித்திரள்