பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 135.

மாலை-திரட்சியைப் பெற்ற மணிகளைக் கட்டிய மாலை. மணி. ஒருமை பன்மை மயக்கம். தாழ-தொங்க. த் : சந்தி. தாரில் பொலி-மாலையினால் தோற்றப் பொலிவைப் பெற்ற பொலி: முதல் நிலைத் தொழிற் பெயர். தோள் வலயங்கள்-வாகு வலயங்கள். வலயங்கள் - வளைகள். தழைத்து-தழைப்பை அடைந்து. மின்ன-மின்னலைப்போல ஒளியை வீச. ச் சந்தி. சேர்வில் பொலி-கூடிய ஒளியோடு விளங்கும். கங்கனம்-கங்கணங்கள் ஒருமை பன்மை மயக்கம். மீது-மேலே. திகழ்ந்த-விளங்கிய. முன்கை-முன்னங்கைகளில்: ஒருமை பன்மை பயக்கம். க், சந்தி. கார்-கருமையான. வில் விரலில். செறி-நெருங்கியமைந்த, நாண்-நாணை. எறி -சுண்டும். கைக்செறி கட்டி அம்புகளை எய்வதற்குச் சாதன மாகிய கைக்கோதையைக் கட்டிக்கொண்டு, கைக்கோதைகைவிரல்களுக்குத் தோலினால் தைத்துப் போடும் உறை. கட்டி-கட்டிக் கொண்டு.

பிறகு வரும் 61-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: * திண்ணனார் தம்முடைய இடுப்பில் புலியினுடைய தோலாகிய உடையின் மேல் கடலில் வீசும் அலைகளில் உண்டாகிய வெண்மையான சோழிகளைக் கட்டி அவற்றை ஒரத்தில் சேர்த்து அமைத்து வரிசையாக விளங்கும் நீண்ட தோலாடையில் உடைவாள் வெளியில் சுற்றியிருக்கும் நறுமணம் கமழும் சிவந்த வார்க் கச்சைச் செலுத்திப் பொருத்தமாக வைத்து இறுகக் கட்டி. பாடல் வருமாறு :

  • அரையிற்சர ணத்துரி ஆடையின் மீது பெளவத்

திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி கிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றம் சூழ் விரையில் துவர் வார்விசி போக்கி அமைத்து விக்கி."

இந்தப் பாடலும் குளகம். அரையில் - திண்ணனார் தம்முடைய இடுப்பில். சரணத்து-புலியினுடைய. உரி ஆடையின் மீது-தோலுடையின் மேல். பெளவ-கடலில் வீசும். த் : சந்தி. திரையில்- அலைகளில் : ஒருமை பன்மை