பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.36 பெரிய புராண விளக்கம்-4

மயக்கம். படு-உண்டாகிய, வெள்-வெள்ளை நிறத்தைப் பெற்ற அலகு-சோழிகளை ஒருமை பன்மை மயக்கம். ஆர்த்து-கட்டிக் கொண்டு. விளிம்பு - அவற்றை ஒரத்தில். சேர்த்தி-சேர்த்து அமைத்து. நிரையின்-வரிசையாக, பொலிவிளங்கும். நீள்-நீளமான உடைதோல்-தோலாடையில். சுரிகை-உடைவாள். ப் : சந்தி. புறம்-வெளியில், சூழ்சுற்றியிருக்கும். விரையில்-நறுமணம் கமழும். துவர்-சிவந்த. வார்விசி-வார்க்கச்சை போக்கி-செலுத்தி, அமைத்துபொருத்தமாக வைத்து. விக்கி-இறுகக் கட்டி.

அடுத்து வரும் 62-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: வீரக்கழல் தன்னுடைய வலக்காலில் திகழும்படி அணிந்து கொண்டு தன்னுடைய திருவடிகளில் சேருமாறு போட்டுக் கொண்ட நீண்ட செருப்புக்கள் விருப்பத்தை வாய்க்கும்படி செய்ய கனத்தைப்பெற்ற பெரிய 'வில்லைத் தன்னுடைய வலக்கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய குலதெய்வத்தை வணங்கித் திண்னன் சேரும்படி தன்னு டைய அழகிய காலை வளைத்து வைத்துக்கொண்டு அந்த வில்லில் நாணைக் கட்டி வியப்பை அடைந்து அந்த வில்லை எடுத்துக் கொண்டு. பாடல் வருமாறு:

' வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப்பெரு வில்வலம் கொண்டு பணிந்து திண்ணன் சாரத்திருத் தாள்மடித்தேற்றி வியந்து தாங்கி .'

இந்தப் பாடலும் குளகம். வீரக்கழல் காலின்-வீரக்கழல் தன்னுடைய வலக்காலில். விளங்க-திகழும் வண்ணம். அணிந்து-அணிந்து கொண்டு. பாதம்-தன்னுடைய திரு வடிகளை ஒருமை பன்மை மயக்கம். சேர சேருமாறு. த்: சந்தி. தொடு - போட்டுக் கொண்ட நீடுநீளமான செருப்பு-செருப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம். விருப்பு-விருப்பத்தை. வாய்ப்ப-வாய்க்கும்படி செய்ய, ப்: சந்தி. பார-கனத்தைப் பெற்ற. ப்:சந்தி. பெரு-பெரிய. வில்

i