பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம் 9%

செய்வதற்கு. ஏ. அசைநிலை. எண்ணி-நினைத்து. த் சந்தி.

-

துணிந்து - துணிவை அடைந்து. எழுந்தான். - எழுந்து சென்றான். -

பிறகு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

"தங்களுடைய தோள்களில் கொண்டுள்ள வலிமையை யும் வீரத்தையும் பெற்ற உற்வினர்களோடும் தனக்குத் துணையாக வரும் மேற்கொள்ளுவதைக் கொண்ட யுத்தம் செய்யும் வீரர்களுடைய கூட்டத்தோடும் போய், வாளா யுதத்தால் பெற்றுக் கொண்ட தாய பாகத்தை வலிமை யைப் பெற்றவரே அடைவது' என்று மூண்டு எழுகின்ற கோபத்தை உடையவனாகிய அதிசூரன் ஏனாதி நாயனாரு டைய திருமாளிகையில் முன்னால் உள்ள வாசலில் நின்று கொண்டு அந்த நாயனாரைப் போர் செய்ய அழைத்தான்.' பாடல் வருமாறு : - - தோள்கொண்ட வல்லாண்மைச் சுற்றத்

தொடும்துணையாம் கோள்கொண்ட போர் மள்ளர் கூட்டத் தொடும்சென்று வாள்கொண்ட தாயம் வலியாரே கொள்வதென மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்

கின்றழைத்தான்.' தோள்-தங்களுடைய தோள்களில்; ஒருமை பன்மை மயக்கம். கொண்ட - மேற்கொண்டுள்ள. வலி-வலிமையை யும்.ஆண்மை-வீரத்தையும் பெற்ற, ச்சந்தி.சுற்றத்தொடும்உறவினர்களோடும்; ஒருமை பன்மை மயக்கம். துணை ஆம்-துணையாக வருபவர்களாகும். கோள் கொண்டமேற்கொள்ளுவதைக் கொண்ட போர்-யுத்தம் செய்யும். மள்ளர்-வீரர்களுடைய ஒருமை. பன்மை மயக்கம். கூட்டத் தொடும் - கூட்டத்தினோடும். சென்று - போய். வாள்வாளென்னும் ஆயுதத்தால். கொண்ட-பெற்றுக் கொண்ட. தாயம்-தாயபாகத்தை வலியாரே வலிமையைப் பெற்ற வரே. கொள்வது-அடைவது. என-என்று; இடைக்குறை