பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரிய புராண விளக்கம்-4

மூள்கின்ற-மூண்டு எழுகின்ற. செற்றத்தான்-கோபத்தை உடையவனாகி; முற்றெச்சம். முன் கடையில்-ஏனாதி நாயனாருடைய திருமாளிகையில் முன்னால் உள்ள வாசலில், நின்று-அதிசூரன் நின்று கொண்டு. அழைத்தான்அந்த நாயனாரைப் போர் செய்ய அழைத்தான்.

பிறகு வரும் 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : கொடுமையான கண்களைப் பெற்ற புலி படுத்திருந்த கொடிய மலைக்குகைக்குப் போய்ப் போர் செய்வதற்கு அழைக்கும் பசுமையான கண்களைக் கொண்ட சிறு நரியைப் போல இருப்பவனாகிய அதிசூரன் ஆயுதத்தைத் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டு சினம் பொங்கி எழுந்து வெளியில் சுற்றி வந்து யுத்தம் செய்வதை எண்ணி நேரில் நின்று கொண்டே அழகிய இடத்தை உடைய ஏனாதி நாயனாருடைய திருமாளிகையின் வாசலில் நின்று கொண்டு போருக்கு அழைத்த அந்த அதிசூரனுடைய சத்தத்தைக் கேட்டு. பாடல் வருமாறு :

  • வெங்கட் புலிகிடந்த வெம்முழையில் சென்றழைக்கும்

பைங்கட் குறுகரியே போல்வான் படைகொண்டு பொங்கிப் புறம்சூழ்ந்து போர்குறித்து நேர்கின்றே அங்கட் கடைகின் றழைத்தான் ஒலிகேளா.."

இந்தப் பர்டல் குளகம். வெம்-கொடிய. கண்-கண் களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். புலி கிடந்த-புவி படுத்துக் கொண்டிருந்த, வெம்-கொடிய. முழையில்-மலைக் குகைக்கு உருபு மயக்கம். சென்று-போய். அழைக்கும். போர் செய்வதற்கு அழைக்கும். பைம்-பசுமையான. கண்கண்களைக் கொண்ட குறுநரி-குள்ளநரியை, போல்வான்போல, உள்ளவனாகிய அதிசூரன். படை ஆயுதத்தை. கொண்டு-தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டு. பொங்கி-சினம் பொங்கி எழுந்து. ப்: சந்தி. புறம்-ஏனாதி நாயனாருடைய திருமாளிகைக்கு வெளியில். சூழ்ந்து - சுற்றி வந்து. போர்-யுத்தம் செய்வதை ஆகுபெயர். குறித்து