பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம் - J }

எண்ணி, நேர்-நேரில், நின்றே-நின்று கொண்டே. அம்அழகிய கண்-இடத்தைப் பெற்ற, கடை-ஏனாதி நாயனாரு டைய திருமாளிகையின் வாசலில், நின்று-நின்று கொண்டு. அழைத்தான்-போருக்கு அழைத்த அந்த அதிசூரனுடைய. ஒலி-அவ்வாறு அழைத்த சத்தத்தை. கேளா-ஏனாதி நாத நாயனார் கேட்டு. - - *

பின்பு வரும் 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

r; * #

' 'யார் போர் செய்வதற்கு என்னை அழைத்தார்? என்று எண்ணி ஆண் சிங்கத்தைப் போலக் கிளர்ச்சியை அடைந்து சேர்தல் பெறுமாறு கச்சோடு செறிவாக அமைந்த ஆடையை இடுப்பின்மேல் இறுகக் கட்டிக் கொண்டு, நீண்ட விரக்கழலையும் தம்முடைய காலில் கட்டிக் கொண்டு, வடித்த வாளாயுதத்தையும் கேடகத்தையும் எடுத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்ல ஏனாதி நாத நாயனார் தம்முடைய திருமாளிகையிலிருந்து வெளியில் வந்தார்." பாடல் வருமாறு : . -

  • ஆர்கொல் பொரஅழைத்தார்’ என்றரியேற் றிற்கிளர்ந்து

சேர்வுபெறக் கச்சில் செறிந்தஉடைமேல்வீக்கி வார்கழலும் கட்டி வடிவாட் பலகைகொடு போர்முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். '

ஆர்-யார். கொல்: அசை நிலை. பொர-போர் செய் வதற்கு. அழைத்தார்-என்னை அழைத்தார். என்று-என்று எண்ணி. அரி ஏற்றின்-ஆண் சிங்க்த்தைப் போல. கிளர்ந்துகிளர்ச்சியை அடைந்து. சேர்ஷ்-சேர்தலை பெற-பெறு மாறு. க் சந்தி, கச்சில்-கச்சோடு; உருபு மயக்கம். செறிந்தசெறிவாக அமைந்த உடை-ஆடையை மேல்-தம்முடைய இடுப்பின்மேல், வீக்கி-இறுகக் கட்டிக் கொண்டு. வார்நீண்ட கழலும்-வீரக்கழலையும். கழல்-வீரக்கழல், வெற் றிக்கழல், கட்டி-தம்முடைய காலில் கட்டிக் கொண்டு. வடி-வடித்துச் செய்த, வாள்-வாளாயுதத்தையும். பலகைகேடயத்தையும். கொடு-தம்முடைய கைகளில் எடுத்துக்