பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பெரிய புராண விளக்கம்-சி.

கொண்டு. போர் முனையில்-போர்க்களத்திற்கு உருபு மயக்கம். ஏனாதி நாதர்-ஏனாதி நாத நாயனார். புறப் பட்டார்-செல்வதற்காகத் தம்முடைய திருமாளிகையிலிருந்து, வெளிப்பட்டு வந்தார். -

பின்பு வரும் 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு ஏனாதி நாத நாயனார் தம்முடைய திருமாளிகையிலிருந்து புறப்பட்ட சமயத்தில் டோருக்குரிய வேலைகளைக் கற்றுக் கொள்ளும் வீரத்தையும் பெருமை யையும் சீர்த்தியையும் பெற்ற காளை மாடுகள்ைப் போன்ற ஆடவர்களும், வேறு இடங்களில் நின்று கொண்டிருந்த மக்களும், வீரத்தைக் கொண்ட சேனையில் உள்ள வாளா யுதங்களை ஏந்திய உறவினர்களும் கேள்விப்பட்( ட்டமாக ஒடி வந்து கொலை செய்வதற்கு அருமை.ா. யுத்த வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்கு இரண்டு பக்கங்களி லும் சேர்ந்தார்கள். பாடல் வருமாறு : х , * x * புறப்பட்ட போதின்கட் போர்த்தொழில்கள் கற்கும்

விறற்பெருஞ்சீர்க் காளையர்கள் வேறிடத்து கின்றார் மறப்படைவாட் சுற்றத்தார் கேட்டோடி வந்து செறற்கரும்போர் வீரர்க் கிருமருங்கும் சேர்ந்தார்கள்.

- புறப்பட்ட-அவ்வாறு ஏனாதி நாத நாயனார் தம் முடைய திருமாளிகையிலிருந்து வெளியில் புறப்பட்ட. போதின்கட்-சமயத்தில். போர்-யுத்தத்துக்குரிய த் சந்தி. தொழில்கள் - வேலைகளை. கற்கும்-கற்றுக் கொள்ளும். விறல்-வீரத்தையும். பெரும்-பெருமையையும். சீர்-சீர்த்தி யையும் பெற்றி. க் சந்தி. காளையர்கள்-காளை மாட்டைப் போன்ற ஆடவர்களும், வேறு இடத்து-வேறு இடங்களில்: ஒருமை பன்மை மயக்கம். நின்றார்-நின்று கொண்டிருந்த மக்களும் ஒருமை பன்மை மயக்கம். மற-வீரத்தைப் பெற்ற, ப் : சந்தி. படை-சேனையில் உள்ள. வாள்-வாளா யுதங்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். சுற்றத்தார்ஏனாதி நாத நாயனாருடைய உறவினர்களும்; ஒருமை