பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம் - 置多

பன்மை மயக்கம். கேட்டு-அதிசூரன் ஏனாதி நாயனாரைப் போருக்கு அழைத்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு. ஓடி வந்து-ஓட்டமாக ஒடி வந்து. செறற்கு-கொலை செய் வதற்கு அரும்-அருமையாக இருக்கும். போர் வீரர்க்கு-யுத்த வீரராகிய ஏனாதி நாத நாயனாருக்கு. இரு-இரண்டு. மருங்கும்-பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். சேர்ந்

தார்கள்-அடைந்தார்கள். -

பிறகு.உள்ள 13-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"ஏனாதி நாத நாயனாருடைய திருமாளிகையின்

வாசலுக்கு வந்து அந்த நாயனாரைப் போர் செய்ய அழைத்த பகைவனாகிய அதிசூரன் வலிமையைப் பெற்ற ஆண் புலியைப் போன்றவராகிய அந்த நாயனாருக்கு முன்னால், 'நம்முடைய வாளாயுதத்தைப் பிரயோகம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுக்கும் நல்ல தாய பாகத்தைப் பெற்றுக் கொள்ளுமிடத்தில் இந்தத் திறந்த வெளியில் இரண்டு டேர்களும் பக்கங்களை வகுத்துக் கொண்டு, நம் இருவருடைய போர் செய்யும் சேனைகளும் சந்தித்து யுத்தத்தை விளையுமாறு செய்தால், தோல்வியை அடையாதவர் அடைவது' என்று கூற. பாடல் வருமாறு :

வந்தழைத்த மாற்றான் வயப்புலிப்போத் தன்னார்முன்

கந்தமது வாட்பயிற்றும் கற்றாயம் கொள்ளுங்கால் இக் தவெளி மேற்கை வகுத்திருவேம் பொருபடையும்

சந்தித் தமர்விளைத்தால் சாயாதார் கொள்வ தென."

இந்தப் பாடல் குளகம். வந்து-ஏனாதி நாத நாயனாரு டைய திருமாளிகையின் வாசலுக்கு வந்து அழைத்த-அந்த நாயனாரைப் போர் செய்வதற்கு அழைத்த. மாற்றான். பகைவனாகிய அதிசூரன். வய-வலிமையைப் பெற்ற, .ப்: சந்தி. புலிப்போத்து-ஆண் புலியை. அன்னார்.போன்ற வராகிய அந்த நாயனாருக்கு. முன்-முன்னால், நந்தமதுநம்முடைய வாள்-வாளாயுதத்தைப் பிரயோக்ம் செய்யும் முறையை ஆகுபெயர். பயிற்றும்-கற்றுக் கொடுக்கும். நல்