பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 பெரிய புராண விளக்கம்-A,

களினால்; ஒருமை பன்மை மயக்கம். தடவி-வில்லைத் தடவி. ச்: சந்தி. சிறு-சிறிய நாண்-நாண் கயிற்றை. எறிந்தார்திண்ணனார் சுண்டினார். &

அடுத்து வரும் 64-ஆம் பாட வின் கருத்து வருமாறு:

பல வேறு வேறாக உள்ள அம்புகளை அம்புப் புலிலிருந்து தேர்ந்து எடுத்து அவற்றை ஒருங்கே செல்லு மாறு எய்து விற்களை ஏந்திய வேடர்கள் கூட்டமாகச் சென்று உடுக்கைகளை எடுத்து ஒலிக்கச் செய்யும் முற்றத்தில் கூறப்படும் வேறு வேறு வாழ்த்துக்களின் முழக்கம் ஒவ்வொரு திசையிலும் சேர்ந்து மிகுதியாக ஒலிக்க வலிமையான ஆண் சிங்கத்தைப்போல விளங்குபவ: ராகிய திண்ணனார் சொல்லுவதற்குரிய அம்புகளை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார் .' பாடல வருமாறு:

பல்வேறு வாளி புதைபார்த் துடன்போத ஏவி வில்வேடர் ஆயத் துடிமேவி ஒலிக்கும் முன்றில் சொல்வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து

விம்ம. வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து கின்றார் .'

பல்-பல. வேறு-வேறாக உள்ள வாளி-அம்புகளை;

ஒருமை பன்மை மயக்கம். புதை-அம்புப் புட்டிலிலிருந்து.

பார்த்து-தேர்ந்து எடுத்து. உடன் போத-அவற்றை ஒருங்கே. செல்லுமாறு. ஏவி-எய்து, வில்-விற்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆய-கூட்டமாகச் சென்று. த், சந்தி. துடி. உடுக்குக்களை ஒருமை பன்மை மயக்கம், மேவி - எடுத்து. ஒலிக்கும்-ஒவிக்கச் செய்யும். முன்றில்-முற்றத்தில். சொல்கூறப்படும். வேறு-வேறு வேறாகிய, வாழ்த்து- வாழ்த்துக் களின் முழக்கம்; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர்.

த் சந்தி, திசைதோறும்-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, என்னும் திசைகள் ஒவ்வொன்றிலும். திசை ஒருமை பன்மை.