பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 13 go

மயக்கம். துதைந்து-சேர்ந்து. விம்ம-மிகுதியாக ஒலிக்க.வல்வலிமையான. ஏறு-ஆண்சிங்கத்தை. போல்வார்-போல விளங்குபவராகிய திண்ணனார். அடல்-கொல்லுவதற்குரிய. வாளி-அம்புகளை ஒருமை பன்மை மயக்கம். தெரிந்துஆராய்ந்து எடுத்துக் கொண்டு. நின்றார் - நின்று கொண்டிருந்தார்.

அடுத்து உள்ள 65-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: பெருமையைப் பெற்ற விற்களை ஏந்திய வேடர்கள் பக்கத்தில் நெருங்கி வந்த சமயத்தில் நீலோற்பலமாகிய சிறந்த பெருமையைக் கொண்ட பெரிய மலரைப் போல ச் செல்லுகின்ற திருமேனியின் ஒளிவெள்ளத்தை வீசும் திண்ணனாருக்கு முன்னால் தேனும், நல்ல மாமிசங்களும், தெளிவாகிய கள்ளும், தேவர்களுக்கு வேடர்கள் நிவேதனம் செய்யும் உணவும், நெற்பொரிகளும் வேறாகவும் இருக்கிற வற்றை எடுத்துக்கொண்டு காட்டில் வாழும் கடவுளுக்குப் பூசை போட்டு நிவேதனங்களைப் படைக்கும் தெய்வ ஆவேசத்தைத் தாங்கும் தேவராட்டி அங்கே வந்தாள் ' பாடல் வருமாறு:

மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில் பானற்குல மாமல ரிற்படர் சோதி யார் முன் தேனற்றசை தேறல் சருப்பொரி மற்றும் உள்ள கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள் .'

மான-பெருமையைப் பெற்ற, ச் சந்தி. சிலை-விற்களை ஏந்திய, ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-காட்டின் பக்கத்தில். நெருங்கு-நெருங்கி வந்த, போதில்-சமயத்தில். பானல்நீலோற்பலமாகிய, குல - பெருமையைக் கொண்ட மாபெரிய, மலரில்-மல ைப் போல. படர் - செல்லுகின்ற. சோதியார்-திருமேனியின் ஒளிவெள்ளத்தை வீசும் திண்ண னாருக்கு. முன்-முன்னால், தேன்-தேனையும். நல்-நல்ல. தசை-மாமிசங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தேறல்