பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼49 - பெரிய புராண விளக்கம்-4

தெளிவாகிய கள்ளையும். சரு.தெய்வங்களுக்கு வேடர்கள் நிவேதனம் செய்யும் உணவையும். ப். சந்தி. பொரி-நெற் பொரிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். மற்றும்-பிறவு மாக. உள்ள-இருக்கிற பொருள்களையும் எடுத்துக்கொண்டு. கான-காட்டில் வாழும் தெய்வத்திற்கு; இடஆகுபெயர் ப்: சந்தி. பலி.பூசைபோட்டு நிவேதனங்களை ஒருன்சி பன்மை மயக்கம். நேர்-படைக்கும், கடவுள்-தெய்வ ஆவேசத்திை. பொறை - தாங்குதலைப் பெற்ற. ஆட்டி- தேவராட்டி. வந்தாள்-அங்கே வந்து சேர்ந்தாள்.

அடுத்து உள்ள 66-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நின்றுகொண்டு எந்த இடங்களிலும் கூடியிருக்கும் விற்களை ஏந்திய வேடர்கள் அகல அங்கே வந்து திண்ணன் இருந்த திருமாளிகைக்குள் போய் அவன் இருந்த இடத் திற்குப்போய் அந்த இடத்தில் வள்ளலாகிய அந்தத் திண்ணனுடைய அழகிய நுதலில் தெய்வத்தைப் பூசித்த அட்சதையை அணிந்து, உன்னுடைய தகப்பனாகிய நாகனுடைய தகப்பனுக்கும் உனக்கு இருக்கும் இந்த நன்மைகள் இருப்பவை அல்ல; மிகவும் பெரியது உன்னுடைய் இந்த வீரம்; அதை எடுத்துச் சொல்லுதல் நம்முடைய அளவுக்குள் அகப்பட்டது அன்று' என்று அங்கே வந்த தேவராட்டி கூறினாள். பாடல் வருமாறு:

கின்றெங்கும் மொய்க்கும் சிலைவேடர்கள் நீங்கப்

புக்குச் சென்றங்கு வள்ளல் திருநெற்றியிற் சேடைசாத்தி உன்தந்தை தந்தைக்கும் இங்கன்மைகள் உள்ள

. அல்ல; நன்றும் பெரி துன்விறல், நம்மள வன்றி.

தென்றாள்.' நின்று-நின்றுகொண்டு. எங்கும்-எந்த இடங்களிலும்: ஒருமை பன்மை மயக்கம். மொய்க்கும்-கூடியிருக்கும். சிலைவிற்களை ஏந்திய ஒருமை பன்மை மயக்கம். வேடர்கள்