பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 14]

வில்விழாவுக்கு வந்த வேடர்கள். நீங்க-அகல. ப் :சந்தி, புக்குதிண்ணன் இருந்த திருமாளிகைக்குள் நுழைந்து. ச்: சந்தி. சென்று-அவன் உள்ள இடத்திற்குப் போய். அங்கு-அந்த இடத்தில். வள்ளல்-வள்ளலாகிய திண்ணனுடைய திருஅழகிய நெற்றியில்-துதலில், சேடை-தெய்வத்தைப் பூசித்த அட்சதையை. சாத்தி-அணிந்து. உன்-உன்னுடைய தந்தை தகப்பனாகிய நாகனுக்கு. தந்தைக்கும். தகப்பனாராகிய உன்னுடைய பாட்டனுக்கும். இந்நன்மைகள்.இத்தகைய நல்ல குணங்களும் வீரமும் செல்வமும். உள்ள - இருக் கின்றவை. அல்ல-அல்ல ஆகும். நன்றும்-மிகவும். பெரிதுபெரியது. உன்-உன்னுடைய. விறல்-வீரம். இது. இந்த வீரத்தை எடுத்துச் சொல்லுதல். நம்-நம்முடைய. அளவு அன்று-அளவுக்குள் அடங்கியது அன்று. என்றாள்-என்று அங்கே வந்த தேவராட்டி கூறினாள். திண்ணனை வள்ளல் என்று இங்கே குறிப்பிட்டதைப்போல வேறோரிடத்திலும், 'வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலாம்.' (கண்ணப்ப நாயனார் புராணம், 180) என்று சேக்கிழார் பாடுவதைக் காண்க.

பின்பு வரும் 67-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த வகையில் வாழ்த்துக்களைக் கூறும் தெய்வ ஆவேசம் வந்து ஆடுவதைப் பெற்ற தேவராட்டியைக் கூறுவதற்கு அரியதாக உள்ள சிறப்பை அவள் செய்த செயலுக்குக் கைம்மாறாகப் புரிந்து அவளை விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் திண்ணனார் தம்முடைய கையில் பிடித்துக் கொண்டிருந்த உறுதியான வில்லைப் பெற்ற கரிய மாரியைப் பொழியும் மேகம் என்று கூறும் வண்ணம் உண்மையான பொலிவைப் பெற்ற வேட்டை யாடுவதை மேற்கொண்டு தம்முடைய திருமாளிகையிலிருந்து, எழுந்து சென்றார். பாடல் வருமாறு:

" அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை யாட்டி

தன்னைச் செப்பற்கரி தாய சிறப்பெதிர் செய்து போக்கிக்