பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#42 பெரிய புராண விளக்கம்-4

கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேகம் என்ன மெய்ப் பொற்புடை வேட்டையின் மேற்கொண்

டெழுந்து போக்தார் .' அப்பெற்றியில்-அந்த வகையில். வாழ்த்தும்-வாழ்த்துக் களைக் கூறும். அணங்கு-தெய்வ ஆவேசம் வந்து ஆடுவதை: ஆகுபெயர். உடை-பெற்ற. ஆட்டி தன்னை-தேவராட்டியை. தன்: அசைநிலை, ச்: சந்தி. செப் பற்கு கூறுவதற்கு. அரிதுஅரியது. ஆய-ஆகிய சிறப்பு-சிறப்பை: என்றது பணம் சீலை முதலியவற்றை. எதிர் - அவள் செய்த நன்மைக்குக் கைம்மாறாக. செய்து-புரிந்து. போக்கி அவளை அனுப்பி விட்டு. க்: சந்தி. கை-தம்முடைய இடக்கையில். ப்: சந்தி. பற்றிய-பிடித்துக் கொண்ட திண் உறுதியான. சிலைவில்லை ஏந்திய கார்-கருமையான. மழை - மாரியைப் பெய்யும். மேகம் என்ன-மேகம் என்று கூறுமாறு. மெய்உண்மையான பொற்பு-பொலிவை. உடை-பெற்று. வேட் டையின்-விலங்குகளை வேட்டையாடுவதை. மேற்கொண்டுதாம் மேற்கொண்டு. எழுந்து - தம்முடைய திருமாளி கையிலிருந்து எழுந்து, போந்தார் - சென்றார். திண்ண னாருக்கு மேகத்தை உவமையாகக் கூறுவதை, 'கருவரை காளமேகம் ஏந்திய தென்னத் தாதை, பொருவரைத் தோள்கள் ஆரப்புதல்வனை எடுத்துக் கொண்டான்.', 'கருமுகில் எ ன் ன நி ன் ற கண்படா வில்லியார் .' (கண்ணப்ப நாயனார் புராணம், 15, 166) என்று சேக் கிழார் வேறிடங்களிற் பாடியவற்றாலும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு : :தம்முடைய திருவடிகளில் போட்டுக்கொண்டு தங்கப் பெற்ற செருப்புக்களை உடையவராய், தோலாகிய தழைப் பைப் பெற்ற நீளமாக இருக்கும் ஆடையை இடுப்பில் உடுத்த வராய், அம்புகளோடு வில்லைப் பிடித்த கைகளைக் கொண்டவராய், வெம்மையைப் பெற்ற கொடிய கண்க ளைப் பெற்றவராய் ஆண்சிங்கத்தைப் போலச் செல்லும்