பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 143

தலைவராகிய திண்ணனாருக்கு முன்னால் கணக்கு இல்லாதவர்களும் யமனைப் போன்ற வலிமையை உடை யவர்களும் ஆகிய வேடர்கள் கூடிய நீளமான கூட்டம்

மிகுதியாக அமைந்து மேலெழுந்தது." பாடல் வருமாறு:

தாளில்வாழ் செருப்பர், தோல் தழைத்த டுே

தானையார்,

வாளியோடு சாபம்மேவு கையர், வெய்ய

- 6u6T母6TTr, ஆளி யேறு போல ஏகும் அண்ண லார் முன் - எண்ணிலார்

மீளி வேடர் நீடு கூட்டம் மிக்குமேல் எழுந்ததே."

தாளில் தம்முடைய திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். வாழ் - போட்டுக்கொண்டு தங்கப் பெற்ற. செருப்பர்-செருப்புக்களை உடையவராய்; முற்றெச்சம். செருப்பு : ஒருமை பன்மை மயக்கம். தோல்-தோலாகிய, தழைத்த-தழைப்பைப் பெற்ற நீடு-நீளமாக இருக்கும். தானையார்-ஆடையை இடுப்பில் உடுத்தவராய்; முற் றெச்சம். வாளியோடு-அம்புகளோடு; ஒருமை பன்மை மயக்கம். சாபம்-வில். மேவு-பிடித்த கையர்-கைகள்ைக் கொண்டவராய்; முற்றெச்சம். கை: ஒருமை பன்மை மயக்கம். வெய்ய-வெம்மையான. வன்-கொடிய, கனார். கண்களைப் பெற்றவராய் முற்றெச்சம் இடைக்குறை. கண்: ஒருமை பன்மை மயக்கம். ஆளியேறுபோல-ஆண்சிங் கத்தைப் போல ஏகும்-செல்லும். அண்ணலார் - தலை வராகிய திண்ணனாருக்கு : 'பெருமையைப் பெற்றவர்’ எனலும் ஆம். முன்-முன்னால், எண்-கணக்கு. இலார்-இல்லா தவர்களாகிய, இடைக்குறை. மீளி - யமனைப் போன்ற வலிமையைப் படைத்த. வேடர்-வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். நீடு-கூடிய நீளமான, கூட்டம் மிக்கு-கூட்டம் மிகுதியாக அமைந்து. மேல் எழுந்தது-மேலே எழுந்து

வந்தது. ஏ: ஈற்றசை நிலை. -