பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - பெரிய புராண விளக்கம்-4

திண்ணனாருக்குச் சிங்கத்தை உவமை கூறுதல், "என்னை ஆளும் கானவர்க்கரிய சிங்கம்.', 'செங்கண் வயக் கோளரியே றன்ன திண்மைத் திண்ணனார்.' (கண்ணப்ட நாயனார் புராணம், 41, 56) என்று சேக்கிழார் வேறிடங் களிலும் பாடுவனவற்றால் உணரலாகும்.

பின்பு உள்ள 69-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வன்மையாகத் தொடர்ச்சியைப் பெற்றுக் கட்டிய கயிறுகளை வலிமையான கைகளை உடைய வீரர்கள் பிடித்துக்கொள்ள வெற்றியைத் தரும் பெண் தெய்வமாகிய கொற்றவை வேடர்கள் ஏந்திய விற்களின்மேல் மேவிய திருவடி முன்னால்போய் நீளுகிறதைப் போல உள்ளவை யாகிய சிவந்த நாக்குகளைப் பெற்ற வாய்களை உடைய னவாகி ஒன்றோடு ஒன்று சேராமல் ஒடுகின்ற வேட்டை நாய்கள் அந்தக் காட்டின் பக்கமெல்லாம் காணப்பட்டன." பாடல் வருமாறு:

வன்றொடர்ப்பி னித்தபாசம் வன்கை மள்ளர்

- கொள்ளவே வென்றிமங்கை வேடர்வில்லின் மீதுலாவு பாதம்முன் சென்றுளுே மாறுபோல்வ செய்யகாவின் வாயவாய், ஒன்றொடொன்று நேர்படாமல் ஓடுநாய்கள்

மாடெலாம்.'

வன்-வன்மையாக தொடர்-தொடர்ச்சியைப் பெற்று; முதனிலைத் தொழிற்பெயர். ப்: சந்தி. பிணித்த-கட்டிய. பாசம்-கயிறுகளை ஒருமை பன்மை மயக்கம். வன். வலிமையைப் பெற்ற. கை-கைகளைக் கொண்டு; ஒருமை பன்மை மயக்கம். மள்ளர்-வீரர்களாகிய வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கொள்ள-பிடித்துக்கொள்ள. ஏ: அசைநிலை. வென்றி-வெற்றியைத் தரும். மங்கை-பெண் தெய்வமாகிய கொற்றவை. வேடர்-வேடர்கள் ஏந்திய, ஒருமை பன்மை மயக்கம். வில்லின்-விற்களில்; ஒருமை. பன்மை மயக்கம். மீது-மேல், உலாவு-மேவும். பாதம்