பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. பெரிய புராண விளக்கம்.4

கட்டினை. அறுக்க-அறுக்கும் வண்ணம். ஏகும்-போகும். ஐயர்-ஐயராகிய திண்ணனாருக்கு. தம்-தம்முடைய. முன்முன்னால். ஏ. அசை நிலை. கார்-கருமையான. வலைவலையில். ப்: சந்தி. படுத்த-அகப்படுத்தும் பொருட்டு, குன்று-மலைப்பக்கத்திலும். கானம்-காட்டிலும் வாழும். மா-விலங்குகளை; ஒருமை பன்மை மயக்கம். வளைக்கவளைத்துப் பிடிப்பதற்காக, நீள்-நீளமான வார்-வார் களையும்; ஒருமை பன்மை மயக்கம். வலை-வலைகளின்; ஒருமை பன்மை மயக்கம். திறம்-வகைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். சுமந்து வந்த-துக்கிக்கொண்டு வந்த. வெற்பர்-மலைவாணர்களாகிய வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். முந்தினார்-முந்திக் கொண்டு சென்றார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

பின்பு உள்ள 71-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு சென்று பெருமையைப் பெற்ற வேதக் கூட்டங்கள் தம்மைத் தேட எல்லாக் காலத்திலும் இருப் பவரும், அந்தக் குளிர்ச்சியைப் பெற்ற பிறைச்சந்திரனும் அடம்பும் கொன்றை மலர்மாலையும் தங்கியிருக்கும் சடா பாரத்தைத் தம்முடைய தலையிற் பெற்றவராகிய காள ஹஸ்தீசுவரரைத் தம்முடைய கண்களில் நீண்டிருக்கும் பார்வை ஒன்றைக் கொண்டு தரிசனம் செய்யப்போகும் பக்தராகிய திண்ணனாருக்கு முன்னால் கணக்கு இல்லாத பார்வை மிருகங்களைக் கூட்டிக் கொண்டு வேடர்கள் எல்லா இடங்களுக்கும் போனார்கள். பாடல் வருமாறு :

கண்ணிமா மறைக்குலங்கள் காட என்றும்

டுேம்அத். தண்ணிலா அடம்புகொன்றை தங்குவேனியார்

- தமைக் கண்ணில்டுே பார்வைஒன்று கொண்டுகாணும்

அன்பர்.மூன்

எண்ணில் பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும்

ஏகினார்."