பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 147

நண்ணி-அவ்வாறு சென்று. மா-பெருமையைப் பெற்ற. மறைக்குலங்கள்.வேதங்களினுடைய கூட்டங்கள். மறை: ஒருமை பன்மை மயக்கம். இப்போது இருக்கு வேதம், யஜுர் வேதம். சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களே இருந்தாலும் முன்பு பல வேதங்கள் இருந்தன என்பதை, 'அனந்தா வை வேதா என்ற வடமொழி வாக்கியம் புலப்படுத்தும். நாட-தம்மைத்தேட. என்றும்-எல்லாக் காலத்திலும். நீடும்-இருக்கும். அத்தண் நிலா - அந்தக் குளிர்ச்சியைப் பெற்ற பிறைச் சந்திரனும். அடம்பு. அடம்பும். கொன்றை-கொன்றை மலர் மாலையும்: ஆகு பெயர். தங்கு-தங்கியிருக்கும். வேணியார் தமைசடாபாரத்தைத் தம்முடைய தலையிற் பெற்றவராகிய காளஹஸ்தீசுவரரை. தமை: இடக்குறை. தம்: அசைநிலை. க் சந்தி. கண்ணில் - தம்முடைய கண்களில்; ஒருமை பன்மை மயக்கம். நீடு-நீண்டிருக்கும். பார்வை ஒன்று கொண்டு-பார்வை ஒன்றைக் கொண்டு. காணும்-தரிசனம் செய்யப் போகும். அன்பர்-பக்தராகிய திண்ணனாருக்கு. முன்-முன்னால், எண்-கணக்கு. இல்-இல்லாத; கடைக்குறை. பார்வை-பார்வை மிருகங்களாகிய மான்களை ஒருமை பன்மை மயக்கம். இவற்றைக்கொண்டு மற்ற மான்களை வேடர்கள் பிடிப்பார்கள். கொண்டு-கூட்டிக் கொண்டு, வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். எம்மருங்கும்எல்லாப் பக்கங்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம், ஏகினார்-சென்றார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 72-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "ஊதுகொம்புகள் முன்னால் முழங்கவும். சிறிய அடிக்கும் பக்கங்களைப் பெற்ற சிறுபறைத் தொகுதியும் பக்கத்தில் போய் ஒலிக்கவும், மற்றப் பக்கத்தில் பம்பையை அதை வைத்திருப்பவர் தட்டி ஒலிக்கச் செய்யவும், திரட்சி. யைக் கொண்ட கைகளை மக்கள் தட்டுகின்ற சிறந்த, சத்தம் எங்கும் பரந்து போகவும், காட்டில் வேட்டையாடு தலை மேற்கொண்டு எழுந்த வேட்டுவச்சாதி பக்கங்களில் வளைந்து வளைந்து போயிற்று. பாடல் வருமாறு: