பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. பெரிய புராண விளக்கம்-4

மைல் தூரமாக உள்ள ப்: சந்தி. பரப்பு-காட்டில் பரவி யுள்ள இடங்களில் ஒருமை பன்மை மயக்கம். எலாம்எல்லாம்; இடைக்குறை. நெடிய நீளமாக உள்ள. திண்உறுதியாகிய. வலை-வலைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தொடக்கு-கட்டுக்களை ஒருமை. பன்மை மயக்கம். நீள்-அந்தக் காட்டில் நீளமாக உள்ள. இடை-இடங்களில். ப்: சந்தி. பிணித்த-கட்டிய நேர்கடி கொள-நேரில் க | வ ைல க் கொள்ளும் வண்ணம். கொள. இடைக்குறை. நேர்கடி கொள-நேரில் கண்ட வர்கள் அச்சத்தை அடைய. எனலும் ஆம். ப்: சந்தி. பரந்த-பரவிய இடம் அமைந்த. காடு-காட்டை. காவல் செய்த அமைத்தபின்-பாதுகாப்புச் செய்து அமைத்த பிறகு, 'செடி-புதரைப்போன்ற..' எனலும் ஆம். தலை-தலைகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சிலைவில்லை ஏந்திய. க்: சந்தி. கை-கைகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். திண்ணனார் முன்-திண்ணனாருக்கு முன்னால். நண்ணினார்-வந்து சேர்ந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்,

அடுத்து வரும் 76-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

கொடுமையான வில்லை ஏந்திய இடக்கையைப் பெற்ற வீரராகிய திண்ணனாரும் வேடர்களோடு சேர்ந்து கொண்டு முன்னால் மேகங்கள் தவழும் பெரிய மலையின் சரிவுள்ள பக்கத்தில் ஓடிவந்த விலங்குகளைப் பயத்தை அடையுமாறு செய்து எதிர்க்கும் வேட்டை நாய்களை நேராக ஒடுமாறு விட்டு நீளமானவையும் சிவந்தவை யுமாகிய அம்புகளோடு சுற்றிப் பாதுகாவலைச் செய்துள்ள காட்டுக்குள் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு:

வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடிமுன் மஞ்சலைக்கும்-மாமலைச் சரிப்புறத்து வந்த மா அஞ்சுவித் தடர்க்கும்நாய்க அட்டமாகள் விட்டு நீள் செஞ்சரத்தி னோடுசூழல் செய்த கானுள்

--- - எய்தினார் . .