பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரிய புராண விளக்கம்-4

பதிய. முன்-முன்னால் உள்ள. இரு-பெரிய கரு-கருமை யான. மா-விலங்காகிய காட்டுப்பன்றி. அங்கு-அந்த இடத்தில். எழு-எழுந்த, சிரம்-தன்னுடைய தலையை. உருவிய-அந்த அம்பு ஊடுருவச் சென்ற. பொழுது-சமயத் தில். அடல்பலத்தை உடைய. எயிறு-தன்னுடைய பற்கள்: ஒருமை பன்மை மயக்கம். உற-அழுந்தும்படி. அதனைஅந்த அம்பை, ப்: சந்தி. பொங்கிய-பொங்கி எழுந்த, சினமொடு-கோபத்தோடு. கவர்வன-கவ்வுபவற்றை. சில புவிகள் புரைவன-போலச் சில புலிகள் விளங்கின.

ஆபிறகு வரும் 81-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: જ "பல கலைமான்கள் தங்களுக்குப் பின்னால் இருந்து . வேடர்கள் எய்த அம்புகள் அந்தக் கலை மான்களினுடைய பின் பக்கங்களில் பதிய அவற்றின் வயிறுகளின் நடுவே சென்று முன் முகங்களிலும் நடுமுகங்களிலும் மேலே ஊடுரு விச் செல்ல முடுகிச் சென்ற வேகத்தோடு அந்தக் கொல்லு கின்ற நுனிகளைப் பெற்ற வருத்துகின்ற அம்புகளினுடைய கூட்டம் எதிரில் வந்த முகத்தை ஊடுருவிச் செல்ல அந்த அம்பு ஒன்றுக்கு ஒன்று எதிருக்கு எதிரே போர் செய் வனவற்றை ஒத்த தலைகளை உடையவையாக விளங்கின.' பாடல் வருமாறு: - .

பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய் முன்கடுமுக மிசையுருவிட முடுகியவிசை யுடன்அக் கொன்முனை அடு சரமினம் எதிர் குறுகியமுகம் உருவத் தன்னெதிரெதிர் பொருவன நிகர் தலையன பல

- * கலைகள்.' இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்: துள்ளது. பல கலைகள்-பல கலைமான்கள். பின்-தங் களுக்குப் பின்னால் இருந்து. மறவர்கள்-வேடர்கள். விடுஎய்த பகழிகள்-அம்புகள். பிறகு-அந்தக் கலைமான்களினு டைய பின் பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். உற-பதிய. வயிறிடை-அவற்றின் வயிறுகளின் நடுவில்; ஒருமை பன்மை மயக்கம். போய்-சென்று. முன்-முன் முகங்களிலும்; ஒருமை