பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 159

பன்மை மயக்கம். நடுமுகம்-நடுமுகங்களிலும். மிசை..மேலே, உருவிட-ஊடுருவிச் செல்ல. முடுகிய-முடுகிச் சென்ற. விசை யுடன்-வேகத்தோடு. அ-அந்த க்: சந்தி. கொல்-கொல்லும், முனை-துணிகளைப் பெற்ற ஒருமை பன்மை ம்யக்கம். அடு-வருத்துகின்ற. சரம்-அம்புகளினுடைய ஒருமை பன்மை, மயக்கம். இனம்-கூட்டம். எதிர்-எதிரில். குறுகிய-வந்த, முகம்-முகத்தை உருவ-ஊடுருவிச் செல்ல. த், சந்தி. தன் எதிர் எதிர்-அந்த அம்பு ஒன்று தனக்கு எதிர் எதிரில், பொருவன.போர் செய்பவற்றை நிகர்-ஒத்த. தலையன. தலைகளை உடையவையாக விளங்கின.

பிறகு வரும் 82-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'கருமையான மலை ஒரு வில்லோடு வேகமாகக் கடுகி வந்ததைப் போல்ப் போர்க்களத்திற்கு நேரில் வந்த அரச ராகிய திண்ணனார் விலங்குகளுக்கு முன்னால் எய்யும் கொலை புரியும் அம்புக்கு எதிரில் மற்றோர் அம்பு கொலையைப் புரியும் சமயத்தில் அந்த அம்புகளே போர் புரியும் யானையோடு கோபத்தைப் பெற்ற சிங்கத் தினிடத்தில் குற்றம் அற அதனுடைய உடம்புக்குள் புகுவதால் வருகின்ற இராத்திரி வேளையோடு பகல் வேளை அடைகின்றது என்று கூறும்வண்ணம் செறிந்: திருக்கும் அந்தக் காடு. பாடல் வருமாறு:

கருவரைஒரு தனுவொடுவிசை கடுகியதென

முனைநேர் குரிசில்முன்விடும் அடுசரம் எதிர் கொலையில்

பொழுதவையே பொருகரியொடு சின.அரியிடை புரையறஉடல்

புகலால் வரும் இரவொடு பகல் அணைவன எண்மிடையும்

அவ்வனமே .'

கரு-கருமையான வரை-மலை. ஒருதனுவொடு-ஒரு வில்லோடு. விசை-வேகமாக. கடுகியது-கடுகி வந்தது. என