பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பெரிய புராண விளக்கம்-4

என்று கூறும் வண்ணம்; இடைக்குறை. முனை-போர்க் களத்திற்கு நேர்-நேரில் எழுந்தருளிய. குரிசில்-அரசராகிய திண்ணனார்.முன்-விலங்குகளுக்கு முன்னால். விடும்-எய்யும். அடு-கொலை புரியும். சரம்-அம்புக்கு. எதிர்-எதிரில். கொலை-மற்றோர் அம்பு கொலையை. பயில்-புரியும். பொழுது-சமயத்தில். அவையே-அந்த அம்புகளே. பொருபோர் புரியும். கரியொடு-ஒரு யானையோடு. சினகோபத்தைப் பெற்ற. அரியிடை-ஒரு சிங்கத்தினிடத்தில். புரைஅற-குற்றம் அற. உடல்-அதனுடைய உடம்புக்குள். புகலால்-புகுவதால். வரும்-ஒவ்வொரு நாளும் வரும். இரவொடு-இராத்திரி நோத்தோடு. பகல்-பகல் வேளை. அணைவன-சேர்ந்திருப்பவை. என-என்று கூறும் வண்ணம்; இடைக்குறை. அவ்வனம்-அந்தக் காடு. ஏ: ஈற்றசை நிலை, மிடையும்-செறிந்திருக்கும்.

திண்ணனாருக்கு மலை உவமை: மலை ஒன்று வந்த தென்னக் கை விரவு சிலைவேடர் போற்ற வந்து. என்று சேக்கிழார் வேறோர் இடத்தில் பாடியதைக் காண்க.

பின்பு உள்ள 83-ஆம் ப்ாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தக் காட்டில் உள்ள நீளமான இடத்தில் வேகத் தோடு மேலெழும்பிக் கு சிக்க நீண்ட மேகத்தைத் தொடும் வண்ணம் குதித்து எழுகின்ற மான், தங்களுடைய கால்களில் பூண்ட வெற்றிக்கழல்களைப் பெற்ற வேடர்கள் எய்யும் அம்புகளினுடைய வரிசை தொடர்ந்து செல்பவை அவை தாம் ஒளிர்ைவீசும் கிாணங்களைப் பெற்ற சந்திரனிடத் லிருந்து பிரிந்து வரும் என்று சொல்லுமாறு தரையில் விழும் அந்த மானைக் கிரக்த்தோடு பழகிக் கவ்வுகின்ற பாம்பு தொடர்ந்து செல்கின்ற நிலையை மேற்கொள்ளும் வண்ணம் எதிரில் வரும் பல மான்கள் இருக்கின்றன. பாடல் வருமாறு: