பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் A 61

tளிடைவிசை மிசை குதிகொள நெடுமுகில்தொட

எழுமான் தாளுறுகழல் மறவர்கள் விடு சரம்கிரைதொடர்

வனதாம் வாள்விடுகதிர் மதிபிரி வுற வருமெனவிழும் உழையைக் கோளொடுபயில் பணிதொடர்நிலை கொளஉள

எதிர்பலவே.'

நீள்-அந்தக் காட்டில் உள்ள நீளமான, இடை-இடத்தில். விசை-வேகத்தோடு. மிசை-மேல். குதிகொள-குதிக்க. கொள: இடைக்குறை. நெடு-நீளமான முகில்-மேகத்தை. தொட-தொடும் வண்ணம். எழுமான்-எழுகின்ற மான். தாள்-தங்களுடைய கால்களில் ஒருமை பன்மை மயக்கம். உறு-பூண்ட சுழல்-வெற்றிக் கழல்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மறவர்கள்-வேடர்கள். விடுகள் ப்யும். சரம்-அம்புகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். நிரைவரிசை. தொடர்வண்-தொடர்ந்து செல்பவையாகிய, தாம்அவைதாம். வாள்-ஒளியை. விடு-வீசும். கதிர்-கிரணங் களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மதி-சந்திரனிடத் திலிருந்து. பிரிவுற வரும்-பிரிவு அமையுமாறு வரும், எண்என்று கூறுமாறு; இடைக்குறை. விழும்-தரையில் விழும். உழையை-அந்த மானை. சந்திரனிடம் உள்ள கறையை மான் என்று கூறுவது வழக்கம். க்: சந்தி. கோளொடுகிரகத்தோடு. பயில்-பழகிக் கவ்வுகின்ற, பணி - பாம்பு. தொடர்-தொடர்ந்து செல்கின்ற. நிலை-நிலையை கொள. மேற்கொள்ளும் வண்ணம்; இடைக்குறை. எதிர்-எதிரில் வரும். பல-பல மான்கள். ஏ. ஈற்றசை நிலை. உன-இருக் கின்றன. சந்திர கிரகணத்தின்போது அதை ராகு என்ற பாம்பு கவ்வுவதாகக் கூறுதல் மரபு.

பிறகு உள்ள 84-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு ...

சமுத்திரத்தில் பரந்திருக்கும் நீரை முகந்து கொள்ளும் பொருட்டு அந்தச் சமுத்திரத்தில் படிபவை ஆகிய கரிய,

மெ.-4-11 - -