பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l62 - பெரிய புராண விளக்கம்-4

மேகம் என்று கூறுமாறு வரிசையாக படர்தலோடு நெருங்கித் தழைகள் நெருங்கியவையாகி மேவுகின்ற செடிகள் வளர்ந்திருக்கும் காடாகிய அதன்மேல் கொல்லு தலைப் பெற்ற அம்புகள் தங்களுடைய உடம்புகளில் பதிய மலையினுடைய அடிவாரமாகிய இடத்தில் சுழல்வதால் செறிந்திருக்கும் கரிய மரைமான் கரடிகளோடு காட்டெரு மைகள் தரையில் இறந்து விழுபவையாக இருக்கும்.' பாடல வருமாறு:

கடல் விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென -

- நிரையே: படர்வொடுசெறி தழைபொதுளிய பயில் புதல்வனம்

  • அதன் மேல் அடலுறுசரம் உடலுறவரை யடியிடம்அல மரலால் மிடைகரு மரை கரடிகளொடு விழுவனவன மேதி."

கடல்-சமுத்திரத்தில். விரி-பரந்திருக்கும். புனல்-நீரை. கொள- முகந்து கொள்ளும் பொருட்டு; இடைக்குறை. விழுவண்-படிபவை ஆகிய கரு-கரிய. முகில்-மேகம். எனஎன்று கூறுமாறு: இடைக்குறை. நிரை-வரிசையாக. ஏ.: அசைநிலை. படர்வொடு-படர்தலோடு. செறி-நெருங்கி. தழை-தழைகள்; ஒருமை பன்மை மயக்கம். பொதுளியநெருங்கியவையாகி. பயில் - மேவுகின்ற. புதல்-செடிகள் வளர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வனம் அதன் மேல்-காடாகிய அதற்கு மேலே. அடல்-கொல்லுதலை. உறு-பெற்ற, சரம்-அம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். உடல் - தங்களுடைய உடம்புகளில்; ஒருமை பன்மை மயக்கம். உற-பதிய. வரை-மலையினுடைய. அடி-அடி வாரமாகிய, இடம்-இடத்தில். அலமரலால்-சுழல்வதனால், மிடை-செறிந்திருக்கும். கரு-கரிய. மரை-மரைமான், கரடி களொடு-கரடிகளோடு. வனமேதி - காட்டெருமைகள்; ஒருமை பன்மை மயக்கம். விழுவன-இறந்து போய்த் தரையில் விழுபவையாக இருக்கும்.