பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் * 163

பின்பு உள்ள 85-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பல துறைகளில் அஞ்சுதலோடு பரப்பிய வலைகள் அறும் வண்ணம் நுழையும் விலங்குகள் வேகமாக ஒடுவதைத் தடுப்பதற்காகத் தாங்கள் கொண்ட கோபத்தோடு அவற். றைக் கவ்விப் பிடிக்கும் வேட்டை நாய்கள் உலகத்தில் உள்ள புண்ணியம் பாவம் என்ற இரண்டு வினைகளாகிய, வலையினிடையில் சிக்கித் தங்களுடைய இயல்பாகிய நிலை. களிலிருந்து சுழலும் மக்களுடைய வாழ்க்கையின் வழியில் சேர்கின்ற தன் மாத்திரைகளைப் பெற்ற மனங்களின் நடுவில் மெய்யறிவைப் பெறாதபடி தடையைப் புரிந்த மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்து இந்திரியங்களினுடைய தன்மையை ஒத்திருந்தன. பாடல். வருமாறு: - - - -

பலதுறைகளின் வெருவரவொடு பயில்வலைஅற

நுழைமா உலமொடுபடர் வனதகையுற உறுசினமொடு

கவர்நாய், நிலவிய இரு வினைவலையிடை கிலைசுழல்பவர்

நெறிசேர் புலனுறுமன எனிடைதடைசெய்த பொறிகளின்அள

வுளவே . .

பல-பலவேறு. துறைகளின் - துறைகளில். வெரு வரவொடு- அஞ்சுதலோடு. பயில் - பரப்பிய. வல்ைவலைகளில்; ஒருமை பன்மை மயக்கம் அற-அறும் வண்ணம். நுழை-அந்த வலைகளில் நுழையும். மா-மான், கரடி, புலி, சிங்கம், ஓநாய் முதலிய விலங்குகள்; ஒருமை பன்மை மயக்கம். உலமொடு-வேகத்தோடு. படர்வண்ஒடும் அந்த விலங்குகளை. தகைஉற-தடுத்தலைச் செய் வதற்காக. உறு-தாங்களிடம் உண்டான, சினமொடுகோபத்தோடு. கவர்-அந்த விலங்குகளைக் கவ்விப் பிடிக்கும். நாய்-வேட்டை நாய்கள்: ஒருமை பன்மை மயக்கம். நிலவிய-உலகத்தில் உள்ள. இருவினை-புண்ணியம், பாவம்