பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்னைப்ப நாயனார் புராணம் - 165

அடிதளர்வுறு கருவுடையன அணைவுறு பிணை

அலையார் : கொடியன எதிர் முடுகியும் உறு கொலைபுரி

- மறவோர் . . இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் திருக்கிறது. கொடியன-கொடுமையைப் பெற்றவையாகிய விலங்குகளுக்கு. எதிர்-எதிரில். முடுகியும்-வேகமாகச் சென் றும். உறு-மிக்க, கொலைபுரி-கொலையைச் செய்யும், மற வோர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். துடி-உடுக்குக் களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். அடியன-கால் களை உடையவையும். அடி ஒருமை பன்மை மயக்கம். மடி-வளைந்த, செவியன-காதுகளைப் பெற்றவையும். செவி: ஒருமை பன்மை மயக்கம். துறு-ஆகி வந்த க்யமுனியானைக் குட்டிகளை ஒருமை பன்மை மயக்கம். தொடரார்-கொல்லுவதற்காக அவற்றைத் தொடர்ந்து செல்ல மாட்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெடிபட-வெடியைப் போல முழங்கி. இரி-ஒடும். சிறு-சிறிய. குருளைகள்-மான், புலி, காட்டுப்பசு, காட்டுப்பன்றி, காட்டெருமை, ஒநாய், ஒட்டகம், சிங்கம் முதலிய விலங்கு களினுடைய குட்டிகளின் மிசை-மேல். படு-அம்புகளை எய்து உண்டாக்கும். கொலை-கொலையை விரவார். அவர்கள் செய்யமாட்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அடி-தங்களுடைய கால்கள்; ஒருமை பன்மை மயக்கம். தளர்வுறு - தளர்ச்சியை அடையுமாறு. கரு-கருப்பத்தை. உடையன-உடையவை ஆகி; முற்றெச்சம். அணைவுறுஅடைகின்றன. பிணை-பெண் மான்களை ஒருமை பன்மை மயக்கம். அலையார் - அம்புகளை எய்து துன்புறுத்த மாட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 87-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இவ்வாறு வருகின்ற கொலை செய்வதாகிய வீரத் தொழில் தங்களுக்கு எதிரில் நடக்கும்போது அதிரும் வண்ணம் துதிக்கைகளைப் பெற்ற மலைகளைப் போன்ற