பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l66. , பெரிய புராண விளக்கம்-4

யானைகளும், அச்சத்தை அடையுமாறு செறிந்துள்ள அந்தக் காட்டில் எழுந்து வருவதாகிய ஒரு காட்டுப்பன்றி மழையைப் பெய்யும் கருமையான மேகம் என்று கூறுமாறு இடியைப் போன்ற குரலோடு பிதிர்கின்ற நெருப்பைத் தன்னுடைய கண்களிலிருந்து சிதறச் செய்து பரப்பியிருந்த வலைகளை அறுமாறு தன்னுடைய தலை நிமிர்தலைப் பெற்றிருக்க முடுகிச் சென்ற மிகுதியான வேகத்தோடு." பாடல் வருமாறு : -

இவ்வகைவரு கொலைமறவினை எதிர்நிகழ்வுழி -

- அதிரக் கைவரைகளும் வெருவுறமிடை கான் எழுவதொர்

- ஏனம் பெய்கருமுகில் என இடியொடு பிதிர்கனல்விழி சிதறி மொய்வலைகளை அறகிமிர்வுற முடுகியகடு

- - விசையில்

இந்தப் பாடல் குளகம். இவ்வகை - இவ்வாறு. வரு-வருகின்ற. கொலை-கொலை செய்வதாகிய, மறவீரத்தைப் பெற்ற வினை-தொழில். எதிர்-தங்களுக்கு எதிரில், நிகழ்வுழி-நடக்கும் போது.அதிர-அதிரும் வண்ணம்; அதிர்ச்சியை அடையுமாறு. க்:சந்தி. கை-துதிக்கைகளைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். வரைகளும்-மலைகளைப் போன்ற யானைகளும்; உவம ஆகுபெயர். வெருவுற - அச் சத்தை அடையும் வண்ணம். மிடை-செறிந்துள்ள. கான்அந்தக் காட்டில். எழுவது-எழுந்து வருவதாகிய, ஒர்-ஒரு. ஏனம்-காட்டுப் பன்றி. பெய்-மழையைப் பெய்யும். சருகருமையான. முகில்-மேகம். என-என்று கூறுமாறு: இடைக் குறை. இடியொடு-இடியைப் போன்ற குரலொடு. பிதிர்பிதிர்கின்ற, கனல்-நெருப்பை. விழி-தன்னுடைய கண்களி லிருந்து: ஒருமை பன்மை மயக்கம். சிதறி-சிதறச் செய்து, மொய்-பரப்பியிருந்த வலைகளை அற - வலைகளை அறுமாறு. நிமிர்வுற-தன்னுடைய தலை நிமிர்தலைப்