பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 167.

பெற்றிருக்க. நிமிர்தல்-மேல் நோக்குதல், முடுகிய-முடுகிச் சென்ற, கடு-மிகுதியான, விசையில்-வேகத்தோடு; உருபு மயக்கம்.

பிறகு வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு செல்லும் அந்தக் காட்டுப் பன்றியைக் கொல்லுகின்ற வலிமையோடு எதிர்க்கும் வேடர்கள் ஆண் சிங்கத்தைப் போல விளங்கும் அந்தத் திண்ணனார் அதைத் தொடர்ந்து செல்லும் வேகத்தோடு அதனுடைய அடிகளின் சுவடுகளின் வழியே போகும் சமயத்தில் வேறு ஒருவரும் அதனை அறிந்து கொள்ளவில்லை; அந்தத் திண்ணனார் தனியாகத் தொடர்ந்து செல்லும்போது அந்தக் காட்டுப் பன்றியின் மேல் அம்பினுடைய நுனியினால் கொல்லும் விற்களைப் பெற்ற காளை மாடுகளைப் போன்றவர் களாகிய இரண்டு வேடர்கள் அந்தத் திண்ணனாருடைய திருவடிகளைப் பிரியாதவர்களாகி உடன் சென்றார்கள். பாடல் வருமாறு :

. போமது தனை அடுதிறலொடு பொருமறவர்கள்

r - அரியே றாமவர்தொடர் வுறும் விசையுடன் அடிவழிசெலும்

- அளவில் தாமொருவரும் அறிகிலர்.அவர் தனிதொடர்வுழி

- அதன்மேல் ஏ முனை.அடு சிலைவிடலைகள் இருவர்கள்

அடிபிரியார் .

போம்-அவ்வாறு வேகமாகச் செல்லும். அது தனைஅந்தக் காட்டுப் பன்றியை, தன்: அசைநிலை. அடுகொல்லும். திறலொடு - ஆற்றலோடு. பொரு போர் புரியும். மறவர்கள்-வேடர்கள். அரியேறு ஆம்-ஆண் சிங்கத்தைப் போன்றவராகும். அவர்-அந்தத் திண்ணனார். தொடர்வுறும்-அந்தக் காட்டுப் பன்றியைத் தொடர்ந்து செல்லும். விசையுடன்-வேகத்தோடு. அடி-அதனுடைய