பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 175,

பிறகு வரும் 95-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: பொங்கி எழுந்த கோபத்தையும் வில்லையும் பெற்ற அந்த வேடனாகிய நாணன் அவ்வாறு கூறிய பிறகு, 'அந்த இடத்திற்கு நாம் மூன்று பேர்களும் செல்வோம்; இந்த இடத் தில் கிடக்கும் இந்தக் காட்டுப் பன்றியினுடைய உடலை எடுத்துக்கொண்டு நீங்கள் வாருங்கள்” என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுத் திண்ணனாராகிய தாமும் அந்த இடத்திற்கு அந்தப் பொன்முகலியாற்றைப் பார்த்து எழுந்தருளினார்; அரைக்காத தூரத்தில் சிவந்த கண்களைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய காளஹஸ்தீசு வரர் எழுந்தருளித் தங்கியிருக்கும் அழகிய காளத்தி மலை யினுடைய பக்கங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களை உடைய சோலையைப் பார்த்தார். பாடல் வருமாறு: ' பொங்கிய சினவில் வேடன் சொன்னபின்,

o - போவோம் அங்கே , இங்கிது தன்னைக்கொண்டு போதுமின்,' என்று

  • தாமும் அங்கது நோக்கிச் சென்றார்; காவதம் அரையிற்

r - - 85 6 JjT LITÎÊ* , செங்கண்ஏ றுடையார் வைகும் திருமலைச் சாரல்.

@5F「Gö)á) 。""

பொங்கிய-பொங்கி எழுந்த, சின-கோபத்தையும்.வில்ஏந்திய வில்லையும். வேடன் - வேடனாகிய நாணன். சொன்ன-அவ்வாறு கூறிய. பின்-பிறகு, அங்கு-அந்த இடத்திற்கு. ஏ. அசை நிலை. போவோம் - நாம் மூன்று. பேர்களும் செல்வோம். இங்கு-இந்த இடத்தில் கிடந்த, இது தன்னை-இந்தக் காட்டுப் பன்றியினுடைய உடலை. தன்: அசைநிலை. க்: சந்தி. கொண்டு-எடுத்துக்கொண்டு. போதுமின்-நீங்கள் இரண்டு பேர்களும் வாருங்கள். என்றுஎனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. தாமும்திண்ணனாராகிய தாமும். அங்கு-அந்த இடத்திற்கு. அதுஅந்தப் பொன்முகலியாற்றை. நோக்கி-பார்த்து. ச்: சந்தி.