பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரிய புராண விளக்கம்-4

பிறகு வரும் 94-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

என்று நாணனும் காடனும் ஆகிய வேடர்கள் அவ்வாறு சொல்ல அவர்களைத் திண்ணனார் பார்த்து, 'தண்ணீர் எந்த இடத்தில் நன்றாகவும் இந்தக் காட்டில் இருக்கிறது?' என்று கேட்க, நாணன் என்னும் வேடன், 'இதோ வளர்ந்து நின்ற இந்தப் பெரிய தேக்க மரத்துக்கு அப்பால் போனால் உயரமான மலைக்குப் பக்கத்தில் குளிர்ச்சியை அடைந்திருக்கும் நீரைப் பெற்ற பொன் முகலி என்ற ஆறு ஒடும்' என்று கூறினான். பாடல் வருமாறு:

என்றவர் கூறநோக்கித் திண்ணனார், தண்ணீர் எங்கே கன்றும் இவ் வனத்தில் உள்ள தென்றுரை செய்ய

- - it fr Gööt 6UT e.

கின்றஇப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால்

- நீண்ட குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்த பொன்முகலி.'

என்றான்."

என்று-என. அவர்-நாணனும் காடனுமாகிய அவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கூற-அவ்வாறு சொல்ல. நோக்கிஅவர்களைப் பார்த்து. த்: சந்தி. திண்ணனார்.அவர்களு டைய தலைவராகிய திண்ணனார். தண்ணிர்-நாம் குடிப் பதற்குத் தண்ணீர். எங்கு-எந்த இடத்தில். ஏ: அசைநிலை. நன்றும்-நன்றாகவும். இவ்வனத்தில்-இந்தக் காட்டில். உள் ளது-இருக்கிறது. என்று-என உரை செய்ய.கேட்க.நானன். நாணன் என்னும் வேடன். நின்ற-இதோ வளர்ந்து நின்ற. இப்பெரிய - இந்தப் பெரிய தேக்கின்-தேக்க மரத்துக்கு, அப்புறம்-அப்பால். சென்றால்-போனால். நீண்ட-உயரமாக உள்ள. குன்றினுக்கு-மலைக்கு அயல்-பக்கத்தில். ஏ: அசை நிலை, குளிர்ந்த-குளிர்ச்சியை அடைந்த நீர் நிரம்பிய. பொன்முகலி ஓடும்-பொன்முகலி ஆறு ஓடும். என்றான் என்று கூறினான். -