பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 173

பிறகு உள்ள 93-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த நாணனும் காடனும் திண்ணனாரிடம் பின் வரு மாறு கூறலானார்கள்: "இந்த வழியில் நாங்கள் ஓடிவந்து மிகுதியாக பசிவந்து எங்களை அடைந்தது; நீ தந்த இந்தக் காட்டுப் பன்றியினுடைய உடம்பை நெருப்பில் வாட்டிச் சிறிதளவு நீ உண்டு நாங்களும் உண்டு விட்டுத் தண்ணிரைக் குடித்து விட்டுப் பிறகு வெற்றியைக் கொள்கின்ற வேட்டை யாடுவதற்குக் காட்டுக்கு மெல்லப் போவோம்' என்று அந்த இரண்டு வேடர்களும் கூறினார்கள். பாடல் வருமாறு:

மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார்;

- - வழிவந் தாற்ற உற்றது பசிவங் தெம்மை; உதவிய இதனைக்

- - - காய்ச்சிச் சற்றுகீ அருந்தி யாமும் தின்றுதண்ணீர்கு டித்து வெற்றிகொள் வேட்டைக்காடு குறுகுவோம்

மெல்ல. என்றார் ." மற்று : அசைநிலை. அவர்-நாணனும் காடனும் ஆகிய அவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். திண்ணனார்க்குதங்களுடைய தலைவராகிய திண்ணனாருக்கு. மொழி கின்றார்-பின்வருமாறு கூறலானார்கள்: ஒருமை பன்மை மயக்கம். வழி-இந்த வழியில். வந்து-ஓடி வந்து. ஆற்ற...மிகுதியாக. எம்மை-எங்கள் இரண்டுபேர்களையும். பசிவந்து உற்றது. பசிவந்து சேர்ந்தது. உதவிய - நீ குத்தித் தந்த, இதனை-இந்தக் காட்டுப் பன்றியினுடைய உடலை, க்: சந்தி. காய்ச்சி-நெருப்பில் வாட்டி. ச்: சந்தி. சற்று-சிறிதளவு. நீ அருந்தி-நீ உண்டுவிட்டு. யாமும்-நாங்களும். தின்றுஉண்டு விட்டு. தண்ணிர் குடித்து - தண்ணிரைக் குடித்து விட்டு. வெற்றிகொள்-வெற்றியைக் கொள்கின்ற. வேட்டைவிலங்குகளை வேட்டையாடுவதற்கு. க்: சந்தி. காடுகாட்டுக்கு. குறுகுவோம் மெல்ல-மெல்லப் போவோம். என்றார்-என்று அந்த இரண்டு வேடர்களும் கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.