பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரிய புராண விளக்கம்-4

திண்ணன் இதைக் கொன்று விட்டான்; ஐயோ! என்ன

ஆச்சரியம்!” என்று கூறி அந்தத் திண்ணனாருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். பாடல் வருமாறு:

வேடர்தம் கரியசெங்கண் வில்லியால் விசையித்

குத்த பாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு

காடனே, இதன்பின் இன்று காதங்கள் பலவந்

தெய்த்தோம்;. ஆடவன் கொன்றான் அச்சோ!' என்றவர் அடியில்

தாழ்ந்தார்.'

வேடர்தம் - வேடர்களுக்குள். கரிய கருமையான திருமேனியையும். செம்-சிவந்த. கண்-கண்களையும்; ஒருமை: பன்மை மயக்கம். வில்லியார்-ஏந்திய வில்லையும் கொண்ட வராகிய திண்ணனார். விசையில் - வேகத்தோடு; உருபு மயக்கம். குத்த-தம்முடைய உடைவாளாற் குத்த. பாடுபக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். இரு-இரண்டு. துணியாய்-துண்டுகளாகி, ஒருமை பன்மை மயக்கம். வீழ்ந்த-இறந்து போய்த் தரையில் விழுந்த வராகத்தைஅந்தக் காட்டுப் பன்றியை. க்: சந்தி. கண்டு - பார்த்து. நாணன்-நாணன் என்னும் வேடன். காடனே இதன்காடனே இந்தக் காட்டுப் பன்றிக்கு. பின் - பின்னால், இன்று-இன்றைக்கு. காதங்கள் பல-பல காதங்கள். காதம்பத்து மைல் தூரம். வந்து - ஒடி வந்து. எய்த்தோம்களைத்துப்போய் விட்டோம். ஆடவன் - இந்த ஆண், பிள்ளையாகிய திண்ணன். கொன்றான்-இந்த விலங்கைக் கொலை செய்து விட்டான். அச்சோ-என்ன ஆச்சரியம்! என்று-என்று கூறிவிட்டு. அவர்-அந்தத் திண்ணனாருடைய.. அடியில்-திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம், தாழ்ந், தார்-விழுந்து அந்த இரண்டு வேடர்களும் வணங்கி ார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.