பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 171

மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெற

எதிர்உருவிக்

குத்தினர்.உடல் முறியடஎறி குலமறவர்கள்

தலைவர் .'

அத்தரு-அந்த மரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளர்ந்து நிற்கும். சுழலிடை-இடத்திற்கு உருபு மயக்கம். அடை-சென்று சேர்ந்த. அதன்-அந்தக் காட்டுப் பன்றியினுடைய நிலை-நிலைமையை. அறிபவர்-தெரிந்து கொள்பவராகி; முற்றெச்சம். முன்-முன்னால் கை-தம் முடைய கையில், த், சந்தி. தெரி-ஆராய்ந்து வைத்திருந்த, கணையினில்-ஒர் அம்பினால், உருபு மயக்கம். அடுவதுஅந்தக் காட்டுப் பன்றியைக் கொலை செய்வதை. கருதலர்எண்ணாதவராகி; முற்றெச்சம். விசை-வேகமாக. கடுகி. முடுகிச் சென்று. மொய்த்து-மிகுதியாகி. எழு-எழுகின்ற. சுடர்-ஒளியை. விடு-வீசும். சுரிகையை தம்முடைய உடை வாளை. முனை-துணி பெற-தெரியும்படி எதிர்-எதிரில். உருவி-தம்முடைய இடுப்பிலிருந்து உருவிக்கொண்டு. க், சந்தி. எறி-ஆயுதங்களைப் பிரயோகம் செய்யும். குலசாதியிற் பிறந்த, மறவர்கள்-வேடர்களினுடைய..தலைவர்தலைவராகிய திண்ணனார். உடல்-அந்தக் காட்டுப் பன்றியினுடைய உடம்பு. முறிபட-முறிந்து விழும் வண்ணம். குத்தினர்-குத்தினார். . -

அடுத்து வரும் 92-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

வேடர்களினுடைய கருமையான திருமேனியையும்; சிவந்த கண்களையும், ஏந்திய வில்லையும் கொண்டவ ராகிய திண்ணனார் வேகத்தோடு தம்முடைய உடை வாளால் குத்தப் பக்கங்களில் இரண்டு துண்டுகளாகித் தரையில் விழுந்த அந்தக் காட்டுப் பன்றியைப் பார்த்து நாணன் என்னும் வேடன், வேடனே, இந்தக் காட்டுப் பன்றிக்குப் பின்னால் இன்றைக்குப் பல காதங்கள் ஓடிவந்து களைத்துப் போய்விட்டோம்: இந்த ஆண் பிள்ளையாகிய