பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெரிய புராண விளக்கம்-4

குன்றியை-குன்றிமணிகளை; ஒருமை பன்மை மயக்கம். நிகர்-ஒத்தவையும்; பெயரெச்ச வினையாலனையும் பெயர். முன்-முன்னால், செற-எதிர்ப்பதற்காக, எரி - நெருப் பைப் போல எரியும். கொடு-கொடுமையாகிய. விழி-கண் களையும்; ஒருமை பன்மை மயக்கம். இடி-இடியைப் போன்ற. குரல்-குரலையும். நீள்-நீளமான உடலையும்; ஆகுபெயர். பன்றியும்-பெற்றதாகிய அந்தக் காட்டுப் பன்றியும். அடல்-எதிர்த்தலாகிய, வன் - வன்மையான. திறலொடு-ஆற்றலோடு, படர் - செல்லுகின்ற. நெறிவழியில். நெடிது-நெடு நேரம். ஒடி-ஒடிப் போய். த்: சந்தி. துன்றியது.அங்கே இருந்ததாகிய, ஒரு குன்று- ஒரு மலை யினுடைய அடிவரை அடிவாரத்தில், சுலவிய-மேவிய. நெறி-வழியில் உள்ள. சூழல்-இடத்துக்கு. சென்று-போய். அதனிடை-அந்த அடிவாரத்தில். வலி-தன்னுடைய வலிமை. தெருமர-சுழல. மரம்-மரங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிரையில்-வரிசையினிடையே. நின்றது - நின்று கொண்டிருந்தது.

பிறகு உள்ள 91-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்த அந்தக் காட்டுப் பன்றியினுடைய நிலையைத் தெரிந்து கொள்பவராகி முன்னால் தம்முடைய கையில் ஆராய்ந்து வைத்திருந்த ஓர் அம்பினால் அந்தக் காட்டுப் பன்றியைக் கொலை செய்வதை எண்ணாதவராகி வேகமாக முடுகிச் சென்று மிகுதியாகி எழுகின்ற ஒளியை வீசும் தம்முடைய உடைவாளை நுனி தெரியும் வண்ணம் எதிரில் உருவிக்கொண்டு ஆயுதங்களைப் பிரயோகம் செய்யும் சாதியிற் பிற்ந்த வேடர்களினுடைய தலைவராகிய திண்ணனார் அந்தக் காட்டுப் பன்றியினுடைய உடம்பு முறியும் வண்ணம் குத்தினார். பர்டல் வருமாறு :

அத்தருவளர் சுழலிடை யடை அதன்கிலையறி

பவர் முன் கைத்தெரிகணை யினிலடுவது கருதலர் விசை கடுகி