பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 177

பிறகு வரும் 96-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தானனே, இதோ காணும் மலைக்குப் போவோம்” என்று காடன் கூற, அதைப் பார்க்க நீ சென்றால் நல்ல காட்சியே தோன்றும்; இந்த ஆகாயத்தளவும் உயரமாக உள்ள அழகிய காளத்தி மலையின் மேல் எழுந்தருளி நேராக வளைவு இல்லாத குடுமித்தேவர் எழுந்தருளியிருப்பார்: அவரை நாம் தம்முடைய கைகளைக் கூப்பிக் கும்பிடலாம்.' என்று நானன் கூறினான். பாடல் வருமாறு:

காணனே, தோன்றும் குன்றில் கண்ணுவேம்.”

என்ன நாணன் காண போதின்கல்ல காட்சியே காணும்; இந்தச் சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே கோணமில் குடுமித் தேவர் இருப்பர் : கும்பிடலாம்'

என்றான் ." நாணனே - என்னுடைய நண்பனாகிய நாணனே. தோன்றும்-இதோ காணும். குன்றில்-மலைக்கு உருபு மயக்கம். நண்ணுவேம்-நாம் இருவரும் போவோம். என்ன. என்று காடன் கூற, நாணன்-நாணன் என்னும் வேடன். காண-அந்த மலையைப் பார்க்க. நீ போதின்-நீ சென்றால். நல்ல-கண்களுக்கு அழகாக உள்ள காட்சியே காணும்காட்சியே தோன்றும். இந்தச்சேண்-இந்த ஆகாயத்தளவும். உயர்-உயர்ந்திருக்கும். திரு-அழகிய. க்: சந்தி. காளத்தி மலை மிசை-காளத்தி மலையின் மேல். எழுந்து-எழுந்தருளி. செவ்வே-நேராக. கோணம்-வளைவு. இல் இல்லாத, கடைக்குறை. குடுமித்தேவர்-குடுமியை உடைய கடவுள். இருப்பர் - கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பார். கும்பிடலாம்-நாம் நம்முடைய கைகளைக் குவித்து அவரைக் கும்பிடலாம். என்றான்-என்று நாணன் கூறினான்.

அடுத்து வரும் 97-ஆம் பாடவின் கருத்து வருமாறு:

இனிமேல் ஆவது என்ன இருக்கிறது? இந்தக் காளத்தி மலையைப் பார்த்து இங்கே அடையும்தோறும் . . . * 12 سیسسه السلام)