பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெரிய புராண விளக்கம்-4

என்னுடைய மேலே உள்ள சுமை போவதாகிய செயல் ஒன்று இருக்கிறது போல இருக்கும்; அந்தக் குடுமித் தேவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் பொங்கி எழுந்து மேலும் மேலும் என்னிடம் உள்ள மனமும் வேறு ஒரு விருப்பத்தை அடைய வேகத்தோடு நிற்கும்; அந்தக் குடுமித்தேவர் அந்த மலையில் எழுந்தருளியிருப்பது எந்த இடத்தில்? நாம் செல்ல. என்று திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

ஆவதென்? இதனைக் கண்டிங் கணைதொறும்

- என்மேற் பாரம் போவதொன் றுளது போலும், ஆசையும் பொங்கி . . மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா

கிற்கும்;. தேவரங் கிருப்ப தெங்கே? போ' கென்றார்

- திண்ணனார்தாம் .' ஆவது-இனிமேல் ஆகப்போகும் காரியம். என்-என்ன இருக்கிறது. இதனை-இந்தக் காளத்திமலையை. க் சந்தி. கண்டு-பார்த்து. இங்கு-இந்த இடத்தை. அணைதொறும்அடையும் ஒவ்வொரு தடவையும். என்மேல் - என்மேல் உள்ள. பாரம்-சுமை. போவது ஒன்று-போவதாகிய செயல் ஒன்று. உளதுபோலும்-இருக்கிறது போலத் தோற்றும். உளது: இடைக்குறை ஆசையும்-ஆவலும். பொங்கிபொங்கி எழுந்து. மேன்மேல்-மேலும் மேலும். மேவிய-, என்னிடம் உள்ள நெஞ்சும்-மனமும், வேறு ஓர்-வேறாகிய ஒரு. விருப்பு-விருப்பத்தை. உற-அடைய. விரையாநிற்கும்விரைகிறதாக இருக்கும். தேவர்-அந்தக் குடுமித்தேவர். அங்கு-அந்தக் காளத்தி மலையில் இருப்பது-எழுந்தருளி இருப்பது. எங்கு-எந்த இடத்தில். ஏ: அசைநிலை. போகுநான் செல்வேன். திண்ணனார் தாம்-திண்ணனார். தாம்; அசைநிலை. என்றார்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். - . -