பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 179

பிறகு உள்ள 98-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திண்ணனார் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு வேகமாகப் போக நாணனும் காடனும் ஆகிய அந்த வேடர்களும் அவரோடு சென்று தன்னுடைய கரைகளில் வளர்ந்து நிற்கும் மூங்கிலில் உண்டான முத்துக்களும், அகில் மரக்கட்டையும், சந்தன மரமும், மலை வழங்கும் மாணிக்கங்களும், தங்கமும், வயிரமும், ஒவ்வொரு மணல் மேட்டிலும் தன்னுடைய அலைகள் முன்னால் கொண்டு வந்து குவித்து வைத்த அழகிய பொன்முகலி யாற்றை அடைந்தார்கள். பாடல் வருமாறு: - - உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே

- போந்து கரைவளர் கழையின் முத்தும் கார் அகிற் குறடும் . சந்தும் வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினங்

. . தோறும் திரைகள் முன் திரட்டி வைத்த திருமுக லிவினைச்

- சார்ந்தார் ." உரைசெய்து-திண்ணனார் அவ்வாறு திருவாய் மலர்ந்: தருளிச் செய்துவிட்டு. விரைந்து - வேகமாக. செல்லஎழுந்தருள். அவர்களும்-நாணன், காடன் என்னும் அந்த வேடர்களும். உடன்-திண்னனாரோடு. ஏ. அசைநிலை. போந்து-சென்று. கர்ை-தன்னுடைய கரைகளில், ஒருமை. பன்மை மயக்கம். வளர்-வளர்ந்து நிற்கும். கழையின்மூங்கிலில் தோன்றிய. முத்தும்-முத்துக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். கார்-கருமையான அகில்-அகில் மரத் தினுடைய. குறடும்-கட்டையையும். சந்தும்-சந்தன மரத் தையும். வரைமலை. தரு-வழங்கும். மணியும்-மாணிக்கங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். பொன்னும்-தங்கத் தையும். வயிரமும் - வயிரத்தையும். புளினந்தோறும்ஒவ்வொரு மணல் மேட்டிலும், திரைகள்-தன்னுடைய அலைகள். முன்-முன்னால், திரட்டிவைத்த - குவித்து