பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 18

நீ நெருப்பை. க், சந்தி. காண்பாய்-பார்த்துக் கொண்டிருப். பாயாக. இம்மலை-இந்தக் காளத்திமலையின் மேல். ஏறிக் கண்டு. ஏறிப்பார்த்து விட்டு, நாங்கள்-நாணனும் நானும் ஆகிய நாங்கள் இரண்டு பேர்களும். வந்து-திரும்பி வந்து. அணைவோம்-சேருவோம். என்று . எனத் திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு, நாணனும்-நாணன் என்னும் வேடனும். தாமும்-திண்ணனாராகிய தாமும். போந்தார்-சென்றார்கள்; ஒருமை, பன்மை மயக்கம்.

பின்பு உள்ள 100-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வண்டுகள் செறிந்து மொய்க்கும் பொன்முகலி, ஆற்றினுடைய கரையைச் சுற்றி வளர்ந்து நிற்கும் பல. வகையான மரங்களைப் பெற்ற பூம்பொழிலில் மலர்ந்துள்ள மலர்களை வாரிக்கொண்டு வந்த பொன்முகலி ஆற்றினு. டைய தெளிந்த நீரில் இறங்கித் தம்முடைய திருவுள்ளத்தில் தெளிவை அடையும் திண்ணனார் களிப்பு உண்டாகும் மகிழ்ச்சி பொங்கி எழக் காளத்தி மலையைப் பார்த்துவிட்டு குளிர்ச்சியுள்ள நீர் ஓடும் பொன்முகலி ஆற்றின் வழியில் சென்று சிறப்பைப் பெற்ற அந்த மலையினுடைய பக்கத்தை, அடைந்தார். பாடல் வருமாறு: - --

" அளிமிடை கரைசூழ்சோலை அலர்கள்

- கொண் டணைந்த ஆற்றின் தெளிபுனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் - - தாம. களிவரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு

கொண்டு. குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்."

அளி-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். மிடைசெறிந்து மொய்க்கும். கரைபொன்முகலி ஆற்றினுடைய கரையை சூழ்-சுற்றி வளர்ந்து நிற்கும். சோலை.பல வகையான மரங்களைப் பெற்ற பூம்பொழிலில்; அந்த மரங்களாவன: அரச மரம், ஆல மரம், தென்ன மரம்,