பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரிய புராண விளக்கம்-4

பன மரம், செவ்வாழை மரம், கருவாழை மரம், சுகந்தன் வாழை மரம், கூளி வாழை மரம், மொந்தன் வாழை மரம், ரஸ்தாளி வாழை மரம், பேயன் வாழை மரம், நுணா மரம், வாதநாராயண மரம், புளிய மரம், மா மரம், பலா மரம், விளா மரம், வில்வ மரம், வேப்ப மரம், தேக்க மரம், மருத மரம், கொடுக்காப்புளி மரம், பவழமல்லிகை மரம், வாகை மரம், வேங்கை மரம், இருப்பை மரம், கடம்ப மரம் முதலியவை. அலர்கள்-மலர்ந்த மலர்களை. கொண்டு-வாரிக் கொண்டு. அணைந்த-ஓடி வந்த ஆற்றின்-பொன்முகலி ஆற்றில் ஒடும். தெளி-தெளிந்த, புனல்-நீரில். இழிந்துஇறங்கி. சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில். தெளிவுதெளிவை. உறும் - அடையும். திண்ணனார் தாம்திண்ணனார். தாம்: அசைநிலை. களி-களிப்பு. வரும்உண்டாகும். மகிழ்ச்சி-ஆனந்தம். பொங்க-பொங்கி எழ. க்: சந்தி. காளத்தி - காளத்தி மலையை. கண்டு-பார்த்து. கொண்டு-விட்டு. குளிர்-குளிர்ச்சி; முதல்நிலைத் தொழிற். பெயர். வரு-உடைய நீர் ஒடும். நதியூடு-அந்தப் பொன்முகலி ஆற்றின் வழியே. ஏகி-சென்று. க்: சந்தி , குல-சிறப்பைப் பெற்ற வரை-அந்த மலையினுடைய. ச்: சந்தி. சாரல்பக்கத்தை. சேர்ந்தார்-அடைந்தார்.

அடுத்து உள்ள 101-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சூரியன் உச்சியை அடைய தெய்வத் தன்மையையும் பெருமையையும் பெற்ற அந்தக் காளத்தி மலையினுடைய மேற்புறத்தில் அதிர்ச்சியை உண்டாக்கும் துந்துபி என்னும் வாத்தியங்கள் ஐந்தினுடைய முழக்கம் சமுத்திரத்தினுடைய முழக்கத்தைக் காண்பிக்க, 'இந்த முழக்கம் என்ன? நாணனே,' என்று கேட்ட திண்ண்னாரிடம், இந்த மலையில் பெரிய தேனடைகளைச் சுற்றிக்கொண்டு தேன் உள்ள மலர்களில் வண்டுகள் மொய்த்து அதனால் பக்கத்தில் பொங்கி எழும் ஓசையோ?' என்று திண்ணன் கேட்டான்.” பாடல் வருமாறு: