பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - பெரிய புராண விளக்கம்-4

ஏறிய பிறகு, நேர்பட-நேராக. ச்: சந்தி. செல்லும்-எழுந் தருளும், போதில்-சமயத்தில்.

பிறகு உள்ள 104-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பிறைச்சந்திரன் தங்கும்,சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற்கொண்டவராகிய காளஹஸ்தீசுவரரை எழுந்தருளி அந்தத் திண்ணனார் பார்ப்பதற்கு முன்னால் அழகிய கண்களைப் பெற்றவராகிய காளஹஸ்தீசுவரர் கருணை மிகுதியாக அமைந்த திருவருட் பார்வை தம்மை அடைய இப்போது தங்கியுள்ள பிறப்புக்குக் காரணமான முன்பு உள்ள சார்பு தம்மைவிட்டு அகலுமாறு நீங்கிப் பொங்கி எழுந்த சோதியின் நிழலில் ஒப்பு இல்லாத அன்பே தம்முடைய வடிவமாக ஆயினார். பாடல் வருமாறு:

" திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர்

காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்கம்

- எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்புருவம்

- ஆனார் .' திங்கள்-பிறைச்சந்திரன், சேர்-தங்கிய. சடையார் தம்மை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற வராகிய காளஹஸ்தீசுவரரை. தம்: அசைநிலை. ச் சந்தி. சென்று-காளத்தி மலையின் மேல் ஏறிப் போய். அவர்அந்தத் திண்ணனார். காணா-காளஹஸ்தி ஈசுவரரைப் பார்ப்பதற்கு. முன்-முன்னால், ஏ: அசைநிலை. அங்கணர்அழகிய கண்களைப் பெற்றவராகிய காளஹஸ்தி ஈசுவரர். கண்: ஒருமை பன்மை மயக்கம். கணர்: இடைக்குறை. கருனை கூர்ந்த-கருணை மிகுதியாக அமைந்த அருள் திரு நோக்கம்-திருவருட்பார்வை. எய்த-தம்மை அடைய. த்: சந்தி. தங்கிய-இப்போது தங்கியுள்ள. பவத்தின்-வேட ராகப் பிறந்த பிறப்புக்குக் காரணமான. முன்னை-முன்