பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 187

பிறவியிற் செய்த, ச்: சந்தி. சார்பு-சார்பாகிய வினைகள்: ஒருமை பன்மை மயக்கம். விட்டு.தம்மைவிட்டு விட்டு. அகல்அகன்று போக. நீங்கி-அந்த வினைகளிலிருந்து விடுபட்டு. ப்: சந்தி. பொங்கிய-பொங்கி எழுந்த, ஒளியின்-தேசினுடைய. நீழல்-நிழலில். பொரு-ஒப்பு. இல்-இல்லாத; கடைக்குறை. அன்பு-அன்பே. உருவம்-தம்முடைய திருவுருவமாக, ஆனார்ஆயினார். அன்பு வேறு அவர் வேறு என்று இல்லாமல் அவரே அன்பு வடிவமாக ஆகிவிட்டார். "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு.’’ என்று மாணிக்கவாசகர் பாடியருளியதைக்

காண்க.

அடுத்து வரும் 105-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

வானத்தை அளாவும் அழகிய காளஹஸ்தி மலையில் எழுந்தருளிய கொழுந்தைப் போல இருக்கிற தாம் ஒருவரே யாவருக்கும் தலைவராக விளங்கும் காளஹஸ்தீசுவரரைத் திண்ணனார் தரிசனம் செய்தார்; அப்போது தம்மிடம் எழுந்து தோன்றிய பெரிய மகிழ்ச்சியோடு அமைந்த பக்தி பினுடைய வேகமானது மேலே போக மிகுதியாக உள்ள தாகிய ஒரு வேகத்தோடும் மோகம் உடையவராய் ஒட்டமாக ஒடிப் போய்க் காளஹஸ்தீசுவர்ராகிய சிவலிங்கப் பெருமா னாரைத் தழுவிக் கொண்டார்; உச்சியை மோந்து பார்த்து விட்டு நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

- மாகமார் திருக்கா ளத்தி மலைஎழு கொழுந்தா யுள்ள

ஏகநாயகரைக் கண்டார்; எழுந்த பேருவகை அன்பின்

வேகமானது.மேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடும் மோகமாய் ஓடிச் சென்றார்; தழுவினார், மோந்து

- - . . கின்றார். '

மாகம்-வானத்தை. ஆர்-அளாவும். திரு அழகிய. க்: சந்தி. காளத்தி மலை-காளஹஸ்தி மலையில். எழு-எழுந் தருளிய. கொழுந்தாய் - கொழுந்தைப் போல. உள்ளஇருக்கிற, ஏக நாயகரை-தாம் ஒருவரே யாவருக்கும் தலை வராக விளங்கும் காளஹஸ்தீசுவரரை. க்: சந்தி. கண்டார்.