பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பெரிய புராண விளக்கம்-4

திண்ணனார் தரிசனம் செய்தார். எழுந்த - அப்போது பொங்கி எழுந்து தம்மிடம் தோன்றிய பேருவகை-பெரிய மகிழ்ச்சியோடு அமைந்த, அன்பின் - பக்தியினுடைய. வேகமானது-விரைவான போக்கு. ஆனது: சொல்லுருபு. மேற்செல்ல - மேலே போக. மிக்கது-மிகுதியாக உள்ள தாகிய, ஓர்-ஒரு. விரைவினோடும்-வேகத்தோடும். மோக, மாய்-மோகத்தை உடையவராய்; திணை மயக்கம். ஒடிஒட்டமாக ஒடி. ச்: சந்தி. சென்றார்-போனார். தழுவினார். காளஹஸ்தீசுவரராகிய சிவலிங்கப் பெருமானாரைத் தழுவிக் கொண்டார். மோந்து-அவருடைய உச்சியை மோந்து பார்த்து விட்டு. நின்றார்-நின்று கொண்டிருந்தார். பிறகு வரும் 106ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'நீண்ட நேரம் திண்ணனார் பெருமூச்சு விட்டு நின்று: கொண்டு நிரம்பி எழுந்த தம்முடைய திருமேனியில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் திருவடிவம் எல்லா இடங் களிலும் மயிர்க்கூச்சுப் பொங்கி எழச் செந்தாமரை மலர் களைப் போன்ற தம்முடைய கண்களிலிருந்து நீர் அரு. வியைப் போலப் பாய, "அடியேனுக்கு இந்தக் காளத்தி ஈசுவரர் இந்த இடத்தில் கிடைத்தார், ஐயோ! என்ன ஆனந்தம்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. இப்பு இல்லாத அன்பே ஒரு வடிவமாக விளங்கும் இயல்பு தோற்றத்தை அளிக்க. பாடல் வருமாறு:

' கெடிதுபோ துயிர்த்து நின்று கிறைந்தெழு மயிர்க்கால் - தோறும். வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணிர் -.

- அருவி பாய அடியனேற் கிவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ!' - - என்று.

படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற..'

இந்தப் பாடல் குளகம். நெடிது-நீண்டதாகிய. போது. நேரம். உயிர்த்து-திண்ணனார் பெருமூச்சு விட்டு. நின்று