பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 189

நின்று கொண்டு. நிறைந்து-நிரம்பி. எழு-எழுந்த, மயிர்க் கால் தோறும்-தம்முடைய திருமேனியில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காவிலும். வடிவு- தம்முடைய திருவுருவம்.எலாம்எல்லா இடங்களிலும்; இடைக்குறை. புளகம்-மயிர்க்கூச்சு. பொங்க-பொங்கி எழ. மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கண்ணிர்-கண் களிலிருந்து சொரியும் நீர் ஒருமை பன்மை மயக்கம். அருவி பாய-அருவியைப் போலப் பாய்ந்து தர்ையில் ஒட. அடிய னேற்கு-அடியேனுக்கு. இவர் தாம்-இந்தக் காளஹஸ் தீசுவரர். தாம்: அசைநிலை. இங்கு-இந்த மலையில். ஏ: அசை நிலை. அகப்பட்டார்-கிடைத்தார். அச்சோ-ஐயோ என்ன ஆனந்தம்! என்று-எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. படி-ஒப்பு. இலா-இல்லாத இடைக்குறை. ப்: சந்தி. பரிவுதான்-அன்பே. ஒர்-ஒரு. படிவம் ஆம்-வடிவமாக விளங்கும். பரிசு-இயல்பு. தோன்ற-தோற்றத்தை அளிக்க.

அடுத்து உள்ள 107-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

கொடிய வீரத்தைப் பெற்ற குடும்பத்தில் பிறந்த வேட்டுவர்களுடைய சாதியிற் பிறந்தவரைப் போல துதிக் கையைப் பெற்ற மலையைப் போன்ற யானையும், கரடியும், வேங்கையும், சிங்கமும் திரிகின்ற இந்தக் காட்டில் உம்மோடு துணையாக இருப்பவர் ஒருவரும் இல்லாமல் ஐயோ! இந்தக் காளத்தி மலையில் தனியாகத் தேவரீர் இந்த இடத்தில் எழுந்தருளியிருப்பதா?' என்று திண்ண னார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு வருத்தத்தை அடைந்தார். பாடல் வருமாறு: - -

வெம்மறக் குலத்துவந்த வேட்டுவர் சாதி யார்போல் கைம்மலை கரடி வேங்கை அரிதிரி கானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ள ஒருவரும் இன்றிக்

- 3. கெட்டேன்! இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே!’ என்று -

கைந்தார்."