பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J30 பெரிய புராண விளக்கம்-4

வெம்-கொடிய. மற-வீரத்தைப் பெற்ற. க்: சந்தி. குலத்து-குடும்பத்தில், வந்த-பிறந்த, வேட்டுவர் - வேடர் களினுடைய ஒருமை பன்மை மயக்கம். சாதியார்-சாதியிற். பிறந்தவரை, போல்-போல. கை-துதிக்கையைப் பெற்ற, ம்: சந்தி. மலை-மலையைப் போன்ற யானையும். கரடிகரடியும். வேங்கை-வேங்கைப் புலியும். அரி-சிங்கமும். திரிதிரியும். கானம்தன்னில்-இந்தக் காட்டில், தன்: அசைநிலை. உம்முடன்-உம்மோடு, துணையாய்-துணையாகி. உள்ளஇருக்கிற. ஒருவரும்-ஒரு மனிதரும். இன்றி-இல்லாமல். க்: சந்தி. கெட்டேன்-ஐயோ! இம்மலை-இந்தக் காளத்தி மலையில். தனியே-தனியாகவே. நீர்-தேவரீர். இங்கு-இந்த இடத்தில். இருப்பதே-தங்கியிருப்பதா? என்று - எனத் திண்ணனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. நைந்தார்-வருத்தத்தை அடைந்தார்.

கைம்மலை: 'கைவரை யெனத் தகைய காளை.' (தாட கை வதைப் படலம், 47). "கார்கடாமென மிகக் கடுத்த கைம்மலை." (ஆற்றுப் படலம், 47), கைந்நாகம் அனையோன். (திருவடி தொழுத படலம், 2), கைக்

குன்றப் பெருங்கரைய நிருதர்' (களம் காண் படலம், 24). என்று கம்பர் பாடியவற்றைக் காண்க. - பிறகு வரும் 108-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திண்ணனார் தம்முடைய கையில் வைத்திருந்த வில் தரையில் விழுந்ததைக் கவனிக்கவில்லை: காளை மாட்டைப் போன்றவராகிய அவர் மறுபடியும், 'இந்தப் பச்சை இலை. களோடு மலர்களையும் பறித்துக் கொண்டு வந்து அவற்றைக் காளஹஸ்தீசுவரராகிய சிவலிங்கப் பெருமா னாரின் மேல் வைத்து நீரையும் அபிடேகம் செய்து நல்ல தாகிய இந்தக் காரியத்தைப் புரிந்தவர் யாவரோ?' என்று கேட்டவுடன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வில்லை ஏந்திய அந்த நாணன் என்னும் வேடனும், 'யான் இதனைத் தெரிந்து கொண்டேன்.' என்று கூறுவானானான். பாடல் வருமாறு: