பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 191

கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள, இந்தப் பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து மச்சிது செய்தார் யாரோ?' என்றலும் மருங்கு கின்ற அச்சிலை நாணன் தானும், கானிது அறிந்தேன்."

என்பான்."

காளையார்-காளைமாட்டைப் போன்றவராகிய திண் ணனார். கை-தம்முடைய கையில் வைத்திருந்த, ச் சந்தி. சிலை-வில். விழுந்தது-தரையில் விழுந்ததை. ஒரார்-கவனிக்க வில்லை. மீள-மறுபடியும். இந்தப் பச்சிலையோடு-இந்தப் பச்சையான இலைகளோடு; ஒருமை பன்மை மயக்கம். என்றது வில்வ பத்திரங்களை. பூவும்-மலர்களையும்: ஒருமை பன்மை மயக்கம். பறித்து - கொய்து கொண்டு வந்து இட்டு - இந்தச் சிவலிங்கப் பெருமானாரின் மேல் வைத்து. நீரும்-நீரையும். வார்த்து-அபிடேகம் செய்து. மச்சிது-நல்லதாகிய இந்தச் செயலை, இது தெலுங்கு. செய்தார்-புரிந்தவர். யாரோ-எவரோ. என்றலும்-என்று. திண்ணனார் கேட்டவுடன். மருங்கு-அவருடைய பக்கத்தில். நின்ற-நின்று கொண்டிருந்த அச்சிலை நாணன் தானும்வில்லை ஏந்திய அந்த நாணன் என்னும் வேடனும். தான்: அசைநிலை. நான்-யான். இது-இவ்வாறு செய்தவர் யார் என்ற இதனை. அறிந்தேன்-தெரிந்து கொண்டிருக்கிறேன்; கால மயக்கம். என்பான்-என்று கூறுபவனானான்.

அடுத்து வரும் 109-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"அதைக் கேட்ட நாணன் என்னும் வேடன், வலிமை யான ஆற்றலைப் பெற்ற உன்னுடைய தந்தையாகிய நாக னோடு விலங்குகளை வேட்டையாடி விட்டு முன்பு ஒருநாள் இந்தக் காளத்தி மலைக்கு வந்தோமாக இந்தக் காளஹஸ் தீசுவரராகிய சிவலிங்கப் பெருமானாரைக் குளிர்ந்த நீரால் அபிடேகம் செய்து தான் கொண்டுவந்து சேர்ந்த இலை களையும் மலர்களையும் இவர் தலையின்மேல் அணிந்து நிவேதனத்தைப் படைத்து இவருக்கு முன்னால் தோத்திரங்