பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ல் பெரிய புராண விளக்கம்-4

களைக் கூறி ஓர் அந்தணன் அன்றைக்கு.இதனைப் புரிந்தான்: இன்றைக்கும் இது அந்த அந்தணன் புரிந்ததாகும்.” என்று கூறினான். பாடல் வருமாறு: - -

வன்றிறல் உங்தை யோடு மாவேட்டை ஆடிப் பண்டிக் குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீர் இவரை ஆட்டி ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டிமுன் பறைந்தோர்

பார்ப்பான் அன்றிது செய்தான்; இன்றும் அவன்செய்த தாகும்.'

- என்றான் .'

வன்-அதைக் கேட்ட நாணன் என்னும் வேடன் வலிமை :யான. திறல் - ஆற்றலைப் பெற்ற உந்தையோடுஉன்னுடைய தந்தையாகிய நாகனோடு. மா - மான் முதலிய விலங்குகளை; ஒருமை பன்மை மயக்கம். வேட்டை ஆடி-வேட்டை ஆடிவிட்டு. ப்: சந்தி. பண்டு-முன்பு. இக்குன் றிடை-இந்தக் காளத்தி மலைக்கு உருபு மயக்கம்-வந்தோ மாக-நாங்கள் வந்தோமாக. க்: சந்தி. இவரை - இந்தச் சிவலிங்கப் ப்ெ ரு மா னா ைர. குளிர்ந்த-குளிர்ச்சியாக அமைந்த. நீர்-நீரால். ஆட்டி-அபிடேகம் செய்து. ஒன்றியதான் பறித்துக்கொண்டு வந்து சேர்ந்த, இலை-இலை களையும்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பூ-மலர் களையும்; ஒருமை பன்மை மயக்கம். ச் சந்தி. சூட்டிஇவருடைய தலையின்மேல் அணிந்து. ஊட்டி-நிவேதனத் தையும் படைத்து. முன்பு-முன் ஒருநாள். அறைந்து-தோத் திரங்களைக் கூறி. ஒர்-ஒரு. பார்ப்பான்-பிராமணன். அன்றுஅன்றைக்கு. இது-இந்தச் செயலை. செய்தான்-புரிந்தான். இன்றும்-இன்றைக்கும். அவன்-அந்த அந்தணன். செய்தது ஆகும்-புரிந்ததே ஆகும் இது. என்றான்-என்று நாணன் கூறினான்.

அடுத்து உள்ள 110-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தம்முடைய திருவுள்ளத்தில் நிரம்பி எழுந்ததானாலும் ஒழிதல் இல்லாமல் குறையாத அன்போடு திண்ணனார்