பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 193

அழகிய காளத்தி மலையில் எழுந்தருளிய நாயகராகிய காளஹஸ்தீசுவரருக்கு இனிமையான காரியங்கள் நினைத்த இவைகளோ ஆகும்’ என்று எண்ணி இந்தச் செயலைப் பற்றிக்கொண்டு அந்தத் தலைவராகிய காளஹஸ்தீசு வரரைப் பிரிய முடியாத அளவு இல்லாத அன்பு உண்டாக." பாடல் வருமாறு:

'உண்ணிறைந்தெழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்

திண்ணனார், திருக்கா ளத்தி நாயனார்க் கினிய

- செய்கை எண்ணிய இவைகெலாம்’ என் றிதுசடைப் பிடித்துக்

கொண்டவ் வண்ணலைப் பிரிய மாட்டா அளவில்ஆ தரவு டே .'

இந்தப் பாடல் குளகம். உள்-தம்முடைய திருவுள் ளத்தில் நிறைந்து-நிரம்பி. எழுந்ததேனும் - எழுந்த தானாலும், தம்முடைய திருமாளிகைக்குப் போகலாம் என்ற எண்ணம் திண்ணனாருக்கு உண்டானாலும். என்பது கருத்து. ஒழிவு-ஒழிதல். இன்றி-இல்லாமல். ஆராதிருப்தியடையாத குறையாத அன்பில்-அன்போடு; உருபு மயக்கம். திண்ணனார்-அந்தத் திண்ணனார். திரு.அழகிய. க்: சந்தி. காளத்தி-காளஹஸ்தி மலையில் எழுந்தருளியிருக் கும். நாயனார்க்கு-தலைவராகிய காளஹஸ்தீசுவரருக்கு. இனிய-இனிமையான உகந்த செய்கை-செயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். எண்ணிய-அந்த அந்தணன் நினைத்த. இவைகெலாம் - இவைகளோ ஆகும். என்று-என எண்ணி. இது-இத்தகைய செயலை; என்றது நாணன் கூறிய செயலை, கடைப்பிடித்துக் கொண்டு பற்றிக் கொண்டு. அவ் வண்ணலை-அந்தத் தலைவராகிய காளஹஸ்தீசுவரரை. ‘அண்ணல்-பெருமையை உடையவர் எனலும் ஆம், ப், சந்தி, பிரிய-விட்டுப் பிரிய. மாட்டாமுடியாத அளவுஇல்-அளவு இல்லாத. இல்: கடைக்குறை. ஆதரவு-அன்பு. நீட#2.Éoff-ssós. -

4-13ساد. [L(6 :