பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ‘. பெரிய புராண விளக்கம்-4

பிறகு வரும் 111-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இந்தக் காளஹஸ்தீசுவரரைப் பார்த்த எனக்கு, 'இவர் தனியாக உள்ளவராக இருந்தாரே! ஏன்?' என்று தோன்றுகிறது. இவருக்குத் திரு.அமுது செய்வதற்கு மாமிசம் படைப்பவர் யாரும் இல்லை; இவரைப் பிரிய என்னால் முடியாது; நான் என்ன செய்வேன்? இனிமேல் நான் மிகுதியாக இவருக்கு மாமிசத்தை எடுத்துக்கொண்டு இந்த இடத்திற்கு வரவும் வேண்டும்.' எனத் திண்ணனார் எண்ணி. பாடல் வருமாறு: w

இவர்தமைக் கண்டே னுக்குத் தனியராய் இருந்தார், - என்னே? இவர் தமக் கமுது செய்ய இறைச்சியும் இடுவார்

- - - இல்லை ; இவர்தமைப் பிரிய ஒண்ணா தென்செய்கேன்?

இனியான் சால இவர் தமக் கிறைச்சி கொண்டுங் கெய்தவும்

வேண்டும்' என்று .

இந்தப் பாடலும் குளகம். இவர்தமை-இந்தக் காள ஹஸ்தீசுவரரை; தமை: இடைக்குறை. தம்: அசை நிலை. க்: சந்தி. கண்டேனுக்கு-பார்த்த எனக்கு. த், சந்தி. தனியராய்இவர் தனியாக உள்ளவராகி. இருந்தார்-இருந்தாரே. என்-ஏன்? ஏ: அசைநிலை. என்று தோன்றுகிறது' என்பதை இங்கே வருவக்க. இவர் தமக்கு-இவருக்கு. தம்: அசைநிலை. அமுது செய்ய-உண்ணுவதற்கு இறைச்சியும் இடுவார்மாமிசத்தைப் படைப்பவர். உம்மையைப் பிரித்து இடுவார் என்பதனோடு கூட்டுக. இல்லை-யாரும் இல்லை. இவர்தமை -இவரை. தமை இடைக்குறை. தம்: அசைநிலை. ப்: சந்தி. பிரிய-என்னால் பிரிந்திருக்க. ஒண்ணாது-முடியாது. என்என்ன. செய்கேன்-செய்வேன். இனி-இனிமேல். யான்நான். சால மிகுதியாக. இவர்தமக்கு-இவருக்கு. தம்: அசைநிலை. இறைச்சி-மாமிசத்தை. கொண்டு-எடுத்துக் கொண்டு. இங்கு-இந்தக் காளத்தி மலைக்கு. எய்தவும்