பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாயனார் புராணம் 孟5、

உனக்கு வேண்டுமானால் நான் போர் செய்வதற்கு. வருவேன்' எனத் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து அந்த அதிசூரன் முன்பு கூறிய போர்க்களத்துக்குச் சென்று யுத்தம் செய்ய எண்ணிய தம்முடைய எண்ணத். தைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, கோபம் மூண்டு இரண்டு பேர்களினுடைய படை வீரர்களும் அணி - வகுத்துக் கொண்டு நேருக்கு நேராக நின்று போரிடுவா ராயினார்கள். ' பாடல் வருமாறு :

என்று பகைத் தோன்உரைப்ப ஏனாதி நாதர், அது நன்றுனக்கு வேண்டுமேல் கண்ணுவன்' என் றுள்மகிழ்ந்து சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப் போர்

- குறிப்பக் கன்றி இருபடையும் கைவகுத்து நேர்மலைவார்.'

என்று-என இவ்வாறு. பகைத்தோன்-தம்மைப் பகைத் துக் கொண்டவனாகிய அதிசூரன். உரைப்ப-கூற. ஏனாதி நாதர். ஏனாதி நாத நாயனார். அது அவ்வாறு போர் செய் தல். நன்று-நல்லது. உனக்கு-நினக்கு. வேண்டுமேல்-வேண்டு. மானால், நண்ணுவன்-நான் போர் புரிய வருவேன். என்றுஎன்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து. உள்-தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. சென்றுபோய். அவன்-அந்த அதிசூரன். முன்-முன்பு. சொன்னகூறிய, செருக்களத்து-போர்க்களத்துக்குச் சென்று. ப்: சந்தி. போர்-யுத்தத்தைச் செய்யும். குறிப்பதம்முடைய எண் னத்தைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. த் : சந்தி. கன்றி-சினம் மூண்டு. இரு-இரண்டு, படையும்-சேனை வீரர்களும்; திணை மயக்கம். வைகுத்து - இரண்டு கட்சி களாக அணிவகுத்துக் கொண்டு. நேர்-நேருக்கு நேராக நின்று கொண்டு. மலைவார் . போரிடுவாராயினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். . .

பிறகு உள்ள 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு : மேகங்களின் வரிசைகளை முன்னால் கொண்டு, மின்னல்களின் வரிசையைத் தங்களுக்கு நடுவில் கொண்டு,