பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 199

மாடுற கோக்கிக் கொள்ளும், மறித்துநாம் . போகைக் கின்று நீடநீர் தாழ்த்த தென்னோ? என்றலும் நின்ற காணன்." இந்தப் பாடல் குளகம். காடனும்-காடன் என்னும் வேடனும். எதிர்-திண்ணனாருக்கு எதிரில். ஏ. அசைநிலை. சென்று-போய். தொழுது-அவரை வணங்கிவிட்டு. தீநெருப்பை. க், சந்தி. கடைந்து-தீக்கடை கோலினால் கடைந்து. வைத்தேன்-நான் வைத்திருக்கிறேன். கோடுகொம்புகளை ஒருமை பன்மை மயக்கம். உடைபெற்ற. ஏனம் - அந்தக் காட்டுப் பன்றியினுடைய உடலை; ஆகு பெயர். உங்கள்-உங்களுடைய. குறிப்படி - குறித்த எண்ணத்தின் படியே. உறுப்பை எல்லாம் - அதனுடைய அங்கங்கள் எல்லாவற்றையும். உறுப்பை: ஒருமை பன்மை மயக்கம். மாடு-உங்களுடைய பக்கத்தில். உற-இருக்க. நோக்கிக் கொள்ளும் அவற்றைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மறித்து..மீண்டு. நாம்-யாம். போகைக்குநம்முடைய வீடுகளுக்குச் செல்வதற்கு இன்று-இன்றைக்கு. நீட-நெடு நேரமாக, நீர்-நீங்கள். தாழ்த்தது - தாமதம் செய்தது. என்னோ-ஏனோ. என்றலும்-என்று காடன் என்னும் வேடன் கேட்டவுடன். நின்ற-அங்கே நின்று கொண்டிருந்த நாணன்-நாணன் என்னும் வேடன்.

பிறகு உள்ள 116-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த இடத்தில் இந்தத் திண்ணன் காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைப் பார்த்து. அவரைத் தழுவிக்கொண்டு, தன்னுடைய வளையைப் பிடித்துக் கொண்டு வெளியில் போகாத வலிமையைப் பெற்ற உடும்பு என்று கூறுமாறு அந்த நிலையிலிருந்து இவன் அகல வில்லை; இந்த இடத்திற்கும். அந்தக் குடுமித் தேவர் உண்ணும் பொருட்டு மாமிசத்தை எடுத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறான்; நம்முடைய சாதியின் தலைமைப் பதவியை இவன்விட்டு விட்டான்: அந்தக் குடுமித் தேவருக்கு நல்லவன் ஆகிவிட்டான்'