பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்-4

என்று நாணன் என்னும் வேடன் காடன் என்னும் வேடனிடம் கூறினான்." பாடல் வருமாறு:

அங்கிவின் மலையில் தேவர் தம்மைக்கண்

- டணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான்; இங்கும்அத் தேவர் தின்ன இற்ைச்சிகொண் டேகப்

போந்தான்; கம்குலத் தலைமை விட்டான், கலப்பட்டான் தேவர்க்'

- கென்றான் ."

அங்கு-அந்த இடத்தில். இவன்-திண்ணனாகிய இவன். மலையில்-காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும். தேவர் தம்மை-குடுமித்தேவரை, தம்: அசை நிலை. க், சந்தி. கண்டு-பார்த்து. அணைத்துக் கொண்டு-கட்டித் தழுவிக் கொண்டு. வங்கினை-தன்னுடைய வளையை. ஒரு மரப் பொந்தை' எனலும் ஆம். ப்:சந்தி. பற்றி-பிடித்துக்கொண்டு, ப்: சந்தி. போதா-எவ்வளவு இழுத்தாலும் வராத வல்-வலி மையைப் பெற்ற, உடும்பு என்ன உடும்பு என்று சொல்லும் வண்ணம். உடும்புப்பிடி' என்பது வழக்கு. காடன் என் னும் வேடன் தன்னுடைய சாதிக்கு ஏற்ற உவமையைக் கூறி னான். நீங்கான்-அந்த நிலையிலிருந்து இவன் அகலவில்லை. இங்கும்-இந்த இடத்திலும், அத்தேவர்.அந்தக் குடுமித் தேவர். தின்ன - உண்ணும் பொருட்டு. இறைச்சிமாமிசத்தை. கொண்டு-எடுத்துக் கொண்டு. ஏக-போவதற் காக. ப்:சந்தி.போந்தான்-வந்திருக்கிறான்.நம்-நம்முடைய. குல-வேட்டுவச் சாதியினுடைய. த், சந்தி, தலைமை-தலை மைப் பதவியை விட்டான்-விட்டு விட்டான். தேவர்க்குஅந்தக் குடுமித் தேவருக்கு. நலப்பட்டான்-நல்லவன் ஆகி விட்டான். என்றான்-என்று நாணன் என்னும் வேடன் காடன் என்னும் வேடனிடம் கூறினான். -

பிறகு வரும் 117-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திண்ணனே, நீ என்ன செய்து விட்டாய்? நீதான் என்ன பைத்தியத்தைக் கொண்டாய்? எங்களுக்கு முன்னால்